ஜோக்ஸ்



‘‘கூட்ட ஆரம்பத்திலேயே தலைவர் பேசறாரே... ஏன்?’’
‘‘மனப்பாடம் பண்ணிட்டு
வந்தது எல்லாம் கடைசியா பேசினால் மறந்து
போயிடும்னுதான்!’’
எம்.ஹெச்.இக்பால்,
கீழக்கரை.

‘‘என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ல ‘தொடரும்’னு டாக்டர் எழுதி வச்சிருக்காரே... எதுக்கு சிஸ்டர்?’’
‘‘அவருக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு, இனி வேறு டாக்டர் வந்து பார்ப்பாங்கன்னு அர்த்தம்!’’
- எல்.மூர்த்தி, பி.மணியட்டி.

‘‘கல்யாணப் பத்திரிகையைப் படிச்ச தலைவர் ஏன் கடுப்பாயிட்டார்?’’
‘‘குற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி
போட்டிருக்காம்!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘ஏன் கபாலி,
அந்த நாலாம் நம்பர் வீட்டுல எப்போ திருடினாலும் கையும் களவுமா மாட்டிக்கிறீயே, ஏன்?’’
‘‘அவங்களுக்கும் எனக்கும் இன்னும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலை ஏட்டய்யா!’’
- யுவகிருஷ்ணா,
தூத்துக்குடி.

‘‘விசாரணையில போலீசார் உங்களைத் துன்புறுத்தினார்களா?’’
‘‘ஒருத்தருக்கு ஒருத்தர் நலம் விசாரிக்கவே நேரம் சரியா இருந்தது எசமான்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் வசதி வாய்ப்பு
அதிகமா இருக்கற லேடியா
இருந்தாலும் தலைமுடிக்கு
‘ஹேர்பின்’தான் மாட்டிக்க முடியும்; ‘டால்பின்’ மாட்டிக்க முடியாது!
- பின்னால் வருவதை
முன்னால் தெரிந்து தத்துவம்
சொல்வோர் சங்கம்

ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் மீந்து போனாலும்,
அதை பழைய பேப்பர் கடையில எடைக்கெல்லாம் போட முடியாது!
-தத்துவ தோசை வார்ப்போர் சங்கம்