facebok வலைப்பேச்சுசந்தைக் கூச்சலில் செல்லாக் காசு வைத்திருப்பவன் போல் அமைதியுடனிருக்கிறேன்- கலாப்ரியா

‘உப்பு, காரம் பாருங்க’ என காலையில் நீட்டப்படும் தட்டில் இருப்பது, எலிப் பொறியில் வைக்கப்படும் மசால் வடையின் இடமாறு தோற்றப்பிழைதான்!
- ஈரோடு கதிர்

சில பேரிடம் போனில் பேசிட்டிருந்தால் நாம சார்ஜ் ஆயிடுவோம்; ஆனா போன் சார்ஜ் போயிடும்!
- வடுவூர் ரமா

நமது பெரும் மரியாதைக்குரியவர்கள், பெரும்பாலும் நம்மை மதிப்பதில்லை.
- சித்தன் கோவை

அப்பா (வெச்ச) பேர மகன் காப்பாத்திட்டாரு... ‘தமிழ் மாநில காங்கிரஸ்’.
- ரத்திகா பவழமல்லி

போதையில் வாகனம் ஓட்டிய கிரிக்கெட் வீரர் கிப்ஸ் கைது...
# பறந்து பறந்து பந்த கேட்ச் பண்ணுவியே கிப்ஸு... இப்ப உன்னையே கேட்ச் பண்ணிட்டாங்களே பப்ஸு!
- திவ்யா ராஜன்

யாராச்சும் சூரியனுக்கு ஃப்யூஸ் பிடுங்கி விட்டுட்டாங்களா... ஒரே இருட்டா இருக்குது!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

குடிக்கறதைக் கூட பொறுத்துக்கலாம். ஆனா குடிச்சிட்டு இவனுங்க பேசுற இங்கிலிஷ் இருக்கே... யப்பா!
- ஹரி.ஜெ

காக்கை முட்டைகளை சுட்டுத் தின்னும் சிறுவனாய் இருந்தபோது எனக்குத் தெரியாது, அதில் கொஞ்சம் குயில் முட்டைகளும் இருந்ததென்று...
- மாரி செல்வராஜ்

வெண்ணெய் திரண்டு வரும்போது, மிக்ஸி ஜார் மூடி திறந்தது!
- தீபா சாரதி

‘லேஸ்’ கம்பெனிக்காரன் காற்றை பாக்கெட் பண்ணி விக்கிறதுக்கு முன்பே ‘பூரி’யில் காற்றை நிரப்பி வித்தவங்க நாம!
- பாரு குமார்

வாழ்க்கைங்கிறது சலஃபன் டேப் முனை மாதிரி... ஒருமுறை விட்டுட்டா, மறுபடியும் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே தாவு அந்துடும். வாய்ப்புகளை நழுவ விடாதே...
- பெ.கருணாகரன்

விடுறா... விடுறா... இந்தியப் பிரதமர்னா வெளிநாடு போறதும், மக்களின் முதல்வர்னா கொடநாடு போறதும் சகஜம்தானே!
- பூபதி முருகேஷ்

எனக்கு யார் போன் பண்ணினாலும் முதல்ல ஆங்கிலத்துலதான் பேச்சை ஆரம்பிப்பேன். அவங்களுக்கு புரியுதோ இல்லையோன்னு அடுத்த வார்த்தையில இருந்து தமிழுக்கு மாறிடுவேன். ‘‘பிமீறீறீஷீ... நான் பேசுறது கேட்குதா?’’
- கார்ட்டூனிஸ்ட் முருகு

twitter வலைப்பேச்சு

@iRaVuSu   லவ்வர ‘‘டா’’ போட்டு பேசுனா சேரன்; ‘‘யா’’ போட்டு பேசுனா சிம்பு!

@GOVINDARAJEN
 மனிதனுக்கு 30 வயதாகும் வரை அவன் பெயரை அரிசியில் எழுதி வைத்த கடவுள், அதன்பிறகு கோதுமைக்கு பெயரை மாற்றி விடுகிறார்.
#பூரா பயலுக்கும் சர்க்கரை வியாதி.

@jiboombha   
அம்மாவின் சேலையில் படுத்துறங்கிய சுகம், மனைவியின் புடவையில் வருவதேயில்லை...# அவ்வளவும் கல்லு வச்சி தச்சிருக்காய்ங்க!

@mosakkara 
இந்தியால எந்த ஊரா இருந்தாலும், ரோட்ல எவனையும் திட்டாம ஒரு மணி நேரம் கார் ஓட்டுனா, அதுவே மிகச்சிறந்த ‘தியானம்’ ஆகும்.

@meensmini   
நம் பிறந்தநாளைக்கூட மறந்துவிடும் கணவர், உலகிலேயே நம்மைத்தான் அதிகம் விரும்புகிறார் என்று நம்பித்தான் வாழ வேண்டியிருக்கிறது வாழ்க்கையை.

@dlakshravi
பிடித்த பாடலை ரிங்டோனாக வைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... ‘அழைப்பு வந்தால் உடனே எடுங்கள். மற்ற நேரங்களில் முழுதாக கேட்டுக் கொள்ளவும்!’

@arattaigirl
‘‘என்னைவிட வேலைதான் முக்கியமா’’ன்னு சண்டை போடற எந்தப் பெண்ணும், வேலையில்லாதவனை காதலிக்கத் தயாராயில்லை:))

@kumarfaculty 
விவாகரத்தைத் தடுப்பதில் குழந்தைகளுக்கு அடுத்துதான் நீதிமன்றங்களும், சட்டங்களும் வருகின்றன!

@writercsk   
குற்றவாளிக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம், மாட்டிக் கொள்வதுதான்!

@iam_moorthy
சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும், சக்திமான் காப்பாத்துவாருன்னு நம்பி மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒண்ணுதான்!

@indira jithguru   
பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தேன்... என் வீட்டுக்கு வாங்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் எண்ணிக்கை கூடியிருந்தது!

@sundartsp 
படத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை நிராகரிக்கும் நடிகைகள், நிஜத்தில் அவர்களையே மணக்கிறார்கள்...

@kasaayam   
எல்.இ.டி. டி.வி வாங்குவதில் உள்ள ஒரு அசௌகரியம், அது மேல சாவிக்கொத்து, ரிமோட், செல்போன்னு எதுவும் வைக்க முடியறது இல்ல.

@g_for_Guru
புது பேனா வாங்கியவுடன் பழையதை எனக்குத் தருவார் அப்பா; இப்ப புது மொபைல் வாங்கியவுடன் பழையதை அப்பாவுக்குத் தருகிறேன் நான்.