தத்துவம் மச்சி தத்துவம்



கையில பணம் இருந்தா மாருதியை நாம ஓட்டலாம். கையில பழம் இருந்தா மாருதி தான் நம்மளை ஓட்டும்!
- குரங்குக்கு பயந்து குதித்தோடுவோர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘தலைவரை கிரிக்கெட்ல பிராண்ட் அம்பாஸிடராகக் கேட்டப்போ மானத்தை வாங்கிட்டாரா... எப்படி?’’
‘‘அம்பாஸிடர் எல்லாம் ஓல்டு மாடல்... என்னால முடியாதுன்னுட்டார்!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘எதுக்கு திருட்டு வி.சி.டி தயாரிச்சீங்க?’’‘‘படம் வெளியிட தியேட்டர் கிடைக்கலைன்னு தயாரிப்பாளர் கவலைப்பட்டார் எஜமான்... அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவரே, உங்க மேல ரெண்டு கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க போலிருக்கே...’’‘‘எப்படிய்யா சொல்றே?’’‘‘பாருங்க... குற்றப்பத்திரிகையில ‘இரு கோர்ட்டார் அழைப்பு’ன்னு போட்டிருக்கு!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘நாட்டில் எத்தனையோ கன்ஸ்யூமர் பொருட்கள் இருக்கும்போது, ஜெயிலுக்குப் போய் வந்த ஒரே காரணத்துக்காக, எங்கள் தலைவரை ‘கம்பி’ விளம்பரத்தில் நடிக்க அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஏன் வீடு புகுந்து கொள்ளை அடிச்சே?’’‘‘எனக்கு
பிக் பாக்கெட், வழிப்பறி எல்லாம் சரியா வராது எஜமான்!’’
- அ.ரியாஸ், சேலம்.

ஓலைப்பாயில படுக்கலாம்... கோரைப்பாயில படுக்கலாம்... ஆனா, ரூபாயில படுக்க முடியுமா?
- தத்துவம் சிக்காமல் பாயைப் பிறாண்டுவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.