facebook வலைப்பேச்சு



‘‘மாமா பயப்படாதீங்கோ... இது சிம்பிள் ஆபரேஷன்தான்! ரெண்டே நாள்ல நீங்க வீட்டுக்கு நடந்தே வந்துடலாம்’’ என்று தைரியம் சொன்னால் மாமா கேட்கிறார்... ‘‘ஏன்? ஆபரேஷன் முடிஞ்சா ஆட்டோவுக்குக்கூட காசு இருக்காதா?’’ என்று!
- செல்லி சீனிவாசன்

சித்திரவதை அனுபவித்தாலும் சிறையில் 27 வருடங்கள் தாக்குப் பிடித்த நெல்சன் மண்டேலா, வெளியே வந்த ஆறே மாதத்தில் விவாகரத்து வாங்கியது பற்றி நண்பரொரு வர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.
- பா.ராகவன்

ஒரு ஆம்பள சொல்றது பொய்னு அவன் பொண்டாட்டி யாலயே
கண்டுபிடிக்க முடியலன்னா, ஒலகத்துல எந்தக் கொம்ப னாலும் கண்டே பிடிக்க
முடியாது!
- செல்லி சீனிவாசன்

நீ
கொடுத்த கீ செயின்கள்
கட்டிவிட்ட கடிகாரம்
பரிசளித்த ரீபோக் ஷூ
அனுப்பிய குறுஞ்செய்திகள்

எழுதிப் பார்த்து கொடுத்த பேனா
உருண்டைக் குழம்பு கொடுத்தனுப்பிய டப்பர்வேர்
எம்.பி.ஏ. முடிக்க எழுதிக்கொடுத்த அசைன்மென்ட்
தெரிந்தே தொலைத்த ஆரஞ்சு நிற கர்சீஃப்
எல்லாம் இருக்கின்றன பத்திரமாய்...
உன்னைத் தவிர!
ராஜவேல்

உண்மைக்கு ஒருபோதும் தன்னை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை!
- மன்னை முத்துக்குமார்

சினிமாவை தியேட்டரில் போய்ப் பார்க்காதவர்களுக்கு, ட்ராவல்ஸ் பஸ்களில் பயணம் செய்யும்போது போடுறதுக்காகவே சில திரைப்
படங்களை எடுத்து வெச்சிருப்பாங்களோ???
- மதுமிதா ராஜா

இப்போதெல்லாம் படைக்கிறவனை விட படிக்கிறவன் தைரியசாலியா இருக்கணும். இல்லைன்னா... ‘ஏம்மா இப்படி பண்ணுறீங்க’ வசனம்தான்.
- வாசு முருகவேல்

ஒரு சின்னக் கிண்ணத்தில் கொடுக்கப்படும் சாம்பாரை தோசைக்கு மேல் ஊற்றாமல் அந்தக் கிண்ணத்திலேயே வைத்துத் தொட்டுத் தின்னும் டீசன்சிக்குப் பெயர்தான் கார்ப்பரேட் டகால்ட்டி!
- பிரபாகரன் சேரவஞ்சி

தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொல்ற மாதிரி பஸ், ரயில்லயும் ஏறக்கூடாதுன்னு ஒரு விதிமுறை கொண்டு வாங்கப்பா...
புண்ணியமாப் போகும்!
- தீபா ஜானகிராமன்

ஒருபோதும் உலகில் கேள்விகள் தீர்ந்து போவதில்லை. நீங்கள் அளிக்கவேண்டிய பதில்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டேயிருங்கள்!
- ஈரோடு கதிர்

ஒரு மரணமானது, கோபம், வன்மம், பொறாமை போன்ற பல கொடுங்குணங்களையும் மரணிக்கச் செய்ய வல்லது!
- அனிதா என்.ஜெயராம்

தனிமையை ருசிக்க முயல்கிறேன். பெரு விருப்புடன், ஒரு விருப்பமில்லா ஆறிய தேநீரைப் போல்...
- தீபா சாரதி

twitter

@indirajithguru   
தான் வளர்த்த கோழியின் லெக்பீஸ் தனக்குத்தானென மகள் அழுதபோது, வீட்டுக்கோழியை வெட்டக் கூடாதென அழுது புரண்ட என் பால்யம் ஏனோ நினைவில் வந்தது!

@gurussiva 
ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக் கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’ என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!

@g_for_Guru   
கூத்துப் பட்டறையா நடத்தறாரு ஹசாரே! வெளில வர்ற எல்லாரும் சி.எம். கேண்டிடேட்டா இருக்காங்க ;)

@Baashhu   
வாய் வழியா மூச்சு விடுற ஆப்ஷன் கொடுத்த கடவுள் எவ்வளவு பெரிய எஞ்சினியர்! இல்லைன்னா ஜலதோஷத்துக்கே மண்டைய போட்டிருப்போம்...

@Swaami_ji 
வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல... அமைதியா இருந்தா அடிப்பானுங்க; எழுந்து பறக்க ஆரம்பிச்சிட்டா அலறி
யடிச்சிட்டு ஓடுவானுங்க!
# ஆங்

@miniminimeens
கையில ஒரு சுத்தியல் மட்டும் இருந்ததுன்னா, பாக்கற எல்லாமே ஆணியாத்தான் தெரியும்!

@rannjjii 
இந்த கொசுங்களுக்குள்ள ஜாதிச் சண்டை, மதக் கலவரம்... இதையெல்லாம் யாராச்சும் கௌப்பி விடுங்கப்பா. அதுங்களுக்குள்ளேயே அடிச்சிட்டு சாவட்டும். தொல்ல தாங்க முடியல!

 @Amuthaa_   
என் கண்ணாடியைக் கடவுள் கொஞ்சம் அழகாய்ப் படைத்திருக்கலாம்..!

@jebz4   
எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது. எனக்கும் எல்லாரையும் புடிக்காது; என்னையும் எல்லாருக்கும் புடிக்காது... # குழப்புவோம்!

@Vigna Suresh   
இரண்டு விஷயங்கள் மிகமிக எளிதானது. கும்பலோடு கைதட்டுவது, கூட்டத்தி லிருந்து கல்லெறிவது!

@Carbon Karadi
இவர்கள் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி நான் என்ன செய்தேன்? ‘செத்துப் போய் விடும்’ என் கடமையைத்தானே செய்தேன்...

@raajaacs   
உன்னை அடைய என்னிடம் வழிகள் இல்லை உன்னை அடைய என்னிடம் சொற்கள் இருக்கின்றன

@Mr_vandu   
நாட்டைத் திருத்த வருபவர்கள் சுகர் டேப்ளட்டையும், பிரஷர் மாத்திரையையும் கையோடு எடுத்து வருவது நல்லது.

@PrasathPrabakar 
வகுப்புவாதத்தை விட வாக்குவாதம் ஆபத்தானது எனப் புரிந்துகொண்டேன்...

@ranilisa   
ஞாபக மறதியால் ஒரு கனவு முழுமை பெறவில்லை...

@jeganjeeva 
உலகம் தெரியாம நாம வளர்றோமா? இல்ல, உலகம் நமக்குத் தெரியாம வளருதா?
# ஒண்ணுமே புரியலை உலகத்தில!

@jeganjeeva   
புத்தர், ராமர் இவர்களின் மனைவியர் பெண்ணியவாதிகளா இருந்திருந்தா, இரண்டு கடவுளர்கள் நமக்குக் கிடைச்சிருக்க மாட்டாங்க!