மழைத்தும்பிகள்




*நண்பர்களாய் காமம் உணர்வதற்குள்
கடந்து விடுகின்றன
ஆறேழு ஆண்டுகள்

*மகளுக்கு அம்மா
மகனுக்கு அப்பா
தப்பில்லை
தயவுசெய்து புரிய வையுங்கள்

*பதின்மப் பருவம்
இசை ஆடல் விளையாட்டு
காப்பாற்றும்

*நம்புங்கள்
நம்மைவிடத் தெளிந்தவர்கள்
நம் பிள்ளைகள்

*காதலர் நாள்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
தாலிகள் வைத்திருக்கிறீர்களா?

*மாணவிகள் கால்களை மாணவர்கள்
தொடுதல்
தவறு
மாணவர்கள் தோள்களை மாணவிகள்
தொடுதல்
சரி

அறிவுமதி