வலைப்பேச்சு



facebook

சினேகா, ஐஸ்வர்யா ராய் படங்கள் இல்லாத பெயர்ப் பலகை கொண்ட அடுத்த தலைமுறை பியூட்டி பார்லர்கள் வரத் துவங்கிவிட்டன, பார்த்தீர்களா?!
விக்னேஷ்வரி சுரேஷ்

முன்பு மன்மோகன் சிங், நடுவில் லிங்குசாமி, பின்னர் மோடி, எப்போதும் விஜயகாந்த், நேற்று முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்!
- என்.சொக்கன்

எதிரொலிக்காத சொற்கள் மலையிலேயே தங்கி விட்டன!
- ராஜா சந்திரசேகர்

முதல்வர் வேட்பாளர் அன்பு மணியா?  -பாஜக கடும் கண்டனம்!
 #கிரண் பேடியை நிறுத்தும்போது நாங்க கண்டிச்சமா? அரசியல் நாகரிகம் தெரிய வேணாம்?
- வாசுமுருகவேல்

வளைந்து நெளிந்து செல்லும் பாம்பை விடவும், வளைந்து நெளிந்து செல்லும் ‘பைக்’கைப் பார்க்கும்போது அதி பயங்கரமாய் நடுக்கம் ஏற்படுகிறது.
# முற்பிறவியில் பாம்பா பொறந்திருப்பாய்ங்களோ!
- சுஜாதா சுஜாதா

இந்தியாவிலிருந்து சமூக வலைத்தள வல்லுனர்களை அழைத்துச்சென்று தேர்தலில் பயன்படுத்திய ராஜபக்ஷே வுக்கு தமிழ்நாட்டின் தேர்தல் ஃபார்முலா தெரியாமல் போய்விட்டதே!
நிரந்தர அதிபராக இருந்திருப்பாரே!
- ரவிக்குமார்

பாஜக = 5015
நோட்டா = 1919
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்=1552
டிராபிக் ராமசாமி = 1167
காங்கிரஸ்காரர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள்!!!
ஜீவா நந்தன்

ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் தமிழக அமைச்சர்களை ‘மக்கள் அமைச்சர்கள்’ ஆகாமல் காப்பாற்றியிருக்கிறார்கள்...
- ஈரோடு கதிர்

பழைய பாத்திரங்கள்
தேடும்போது
கட்டிக் கொண்டிருக்கும்
பாதிக் கூடு
சிதைத்தது தெரியாமல்
பாடிக் கொண்டே
மண் சுமந்து வருகிறது
குளவி
கலாப்ரியா

தன் தலைவன் படம் இத்தன கோடி வசூல்னு தெரியுமான்னு ஃபேஸ்புக்ல சண்ட போடுற ரசிகக் கண்மணிகள் காலையில அவங்க வீட்டுல வாங்கும் பால் லிட்டருக்கு எவ்ளோனு தெரிஞ்சு
வச்சிருப்பாங்களா?
- தடாகம் முகுந்த்

இந்தப் பூ, புஷ்பம், முத்தம், பட்டாம்பூச்சி, பெருவெளி, சிறகு, பறவை, வெளிச்சம், இரவு, இருட்டு... இதையெல்லாம் வச்சு எழுதினாதான் கவிதைன்னு ஒத்துக்குவீங்களா? இந்த உளுந்து, துவரம்பருப்பெல்லாம் கவிதைல சொல்லக்கூடாதா?
- நறுமுகை தேவி

சே... என்னை ஏன்டா வௌயாட கூப்பிடலைன்னு
‘கா’ விட்டது போய், என்னை ஏன்டா வௌயாட
கூப்பிட்டன்னு ‘கா’ விடுற காலம் வந்துருச்சே!
# கேண்டி க்ரஷ்
- கார்ட்டூனிஸ்ட் முருகு

twitter

 @laksh_kgm   
இயற்கை இலவசமாகக் கொடுத்த தூய்மையான தண்ணீரைக் கெடுத்து, பின் சுத்திகரித்து, மூன்றில் ஒரு பங்கை சேதாரமாக்கி, விலைக்கு விற்பவன் மனிதன்!

@EvannoOruvant
தமிழ் மாநிலக் கட்சியில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இணைந்தார்.# இதனால் சீனா கலக்கமடைந்துள்ளது...

@RavikumarMGR 
 படம் ஆரம்பிக்கும்போதே அபசகுனமா ‘குடிப்பது உடல்நலத்துக்குக் கேடு’ன்னு போடாதீங்கய்யா!# பலபேர் படம் பாக்கப் போறதே ஃபுல் போதையோடதான்...

@barathi_   
மருந்து, மாத்திரைகள் மட்டும் அல்ல... வார்த்தைகளும் காலப்போக்கில் வீரியம் இழந்து, குப்பைக்குத்தான் போகின்றன!

@sudha_sa   
குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு

@barathi_   
மருந்து, மாத்திரைகள் மட்டும் அல்ல... வார்த்தைகளும் காலப்போக்கில் வீரியம் இழந்து, குப்பைக்குத்தான் போகின்றன!

@Tottodaing   
எந்த வேட்பாளரையும் விட, பணம்தான் அதிக ஓட்டுகளை வாங்குது... இதுகூட தெரியாம என்னத்த வேடிக்கை பாக்குறீங்க!

@PDSangeetha   
சிலர் வாய்க்கு ஜிப்பும், மூளைக்கு லாக்கும், கண்ணுக்குத் திரையும், காதுக்கு வடிகட்டியும், கைகளுக்கு விலங்கும் போடணும்...

@writernaayon   
படமே தெரியாமல் புள்ளிகளை வெறித்துப் பார்த்த நாட்களின் டி.வி. சுவாரஸ்யத்தை இன்று 250 சேனல்களிலிருந்தும் பெற முடியவில்லை!

@MrElani   
குழாய்ல தண்ணி சிந்துறத பாத்தா அலுப்பு பாக்காம நிறுத்திட்டுப் போங்க... அடுத்த தலைமுறைக்கு நாம சேர்த்து வச்சிட்டுப் போற  சேமிப்பு அது மட்டும்தான்.

@MissLoochu   
மோசமான பெண்ணிடம் நல்ல ஆண் ஏமாறுவது காதலிலும், மோசமான ஆணிடம் நல்ல பெண் ஏமாறுவது கல்யாணத்திலும் சாத்தியம்!

@sundartsp 
தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும்: தா.பாண்டியன்# டெபாசிட் வாங்குறதை சொல்றாரு போல!

@su_boss2
தி.மு.க., அ.தி.மு.க. இல்லா மாற்று அணியை மார்க்சிஸ்ட் உருவாக்கும்: காரத்# மொத்தம் 4 பேரை வச்சுக்கிட்டு 2 கட்சி நடத்திட்டு இருக்கீங்க... அதை மொதல்ல இணைக்கப் பாருங்க!

@VG100000
குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை, சில சமயம் சந்தோஷமாகவும் பல சமயம் காயங்களாகவும் புரிய வைக்கிறார்கள்!

@pattaasu     
ரியல் எஸ்டேட்காரனுக எந்த வாகனத்துல போறாங்கன்னு கண்டுபிடிக்கணும்... எந்த இடத்துக்குப் போறதுக்கும் 10 நிமிஷம்தான் டைம் சொல்றாங்க...

@twitvimal   
செவ்வாய்க் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாம். அப்படின்னா உசுரு போனதுக்கு அப்பறம் போனா பரலோகம்; உசுரு இருக்கும்போதே போனா செவ்வாய்க் கிரகம்!

@NamVoice   
நாம் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் நம்மைத் தனிமைப்படுத்தி விடுகிறது.