ஜோக்ஸ்




தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஒரு பொண்ணு குடும்ப குத்துவிளக்கா இருந்தாலும், அவ தலையில திரி போட்டு விளக்கெல்லாம் ஏத்த முடியாது!
- தத்துவ விளக்கை குத்துமதிப்பாய்
ஏற்றுவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘இது கண்டிப்பா உங்களுக்கு வந்த லெட்டரா இருக்காது தலைவரே...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘முதல் வரியில ‘மரியாதைக்குரிய’ன்னு
எழுதியிருக்கே!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘உங்க பொண்ணை ஒருத்தன் கூட்டிட்டு பார்க், பீச், தியேட்டர்னு சுத்தறான். நீங்க கவலைப்பட்ட மாதிரி தெரியலையே?’’
‘‘நான் ஏன் கவலைப்படணும்? காசை கரியாக்குற அவன் இல்ல கவலைப்படணும்!’’
- வி.சகிதாமுருகன்,
தூத்துக்குடி.

‘‘தனக்கு எதிரா சதி நடக்குதுன்னு தலைவர் எதை வச்சு சந்தேகப்
படறார்..?’’
‘‘வருங்கால தற்காலிக முதல்வரேன்னு கட்சி பொதுச்செயலாளரை வாழ்த்தி போஸ்டர் போட்டு இருக்காங்களாம்...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியில இருக்குன்னு எப்படிச் சொல்றே?’’
‘‘இது பிரியாணி கொடுத்து அல்ல... தயிர் சாதம் கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர் பேசறாரே!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘தலைவர் ஏன் வெளிநடப்பு செய்யறதை குறைச்சிக்கிட்டார்?’’
‘‘அவரை நக்கலா ‘நடப்பு சாம்பியன்’னு சொல்றாங்களாம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான்
அஞ்சல் ‘தலை’ன்னாலும், அதுக்கு யாரும் எண்ணெய் வச்சு
தலை வாரி விட முடியாது!
- ‘விக்’ வைத்து வாழ்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஓவியம்: ஜாய்