ஜோக்ஸ்




இது தானாக சேர்ந்த கூட்டம்... காசு கொடுத்து சேர்த்த கூட்டமில்லை!’’
‘‘கூட்டமே சேரல...விடுங்க தலைவரே!’’
- அ.ரியாஸ், சேலம்.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ராக்கெட் வேகமா போகும்னாலும், அதுல லிப்ட் கேட்டு யாரும் பயணிக்க முடியாது!
- ஜாக்கெட் போடாத பெண்களுக்கு மட்டும் லிப்ட் கொடுப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘ஆபரேஷனுக்கு முன்னால என்ன சொன்னாலும் டாக்டர் ‘சரி... சரி...’ன்னு
சொல்லுவார்!’’
‘‘ஆபரேஷனுக்குப் பின்னால..?’’
‘‘ ‘ஸாரி’ங்கற ஒரே வார்த்தைதான்!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

போலீஸ் காவலுக்கு போக ஏன் விரும்பற கபாலி..?’’
‘‘அங்கேதான் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க எசமான்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவரே, மகளிரணித் தலைவியைப் பார்த்து ஓவரா ஜொள்ளு விடாதீங்கன்னேன்... நீங்க கேட்கலை!’’
‘‘சரிய்யா! அதுக்கு இப்ப என்ன?’’
‘‘உங்களை டைமிங்கா ‘உத்தம ஜொள்ளன்’னு சொல்லிக்கிட்டு திரியறாங்க!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

தத்துவம் மச்சி தத்துவம்

விண்வெளிக்கு ராக்கெட் விட்டு அங்கே என்னென்ன இருக்குன்னு கண்டுபிடிக்கலாம். ஆனா சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மட்டும் ஏன்
கண்டுபிடிக்க
முடியலை?
- பத்து பத்து ரூபாயா தேத்தி சரக்கடிப்போர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ்,
கோவிலாம்பூண்டி.

தலைவர் தனியா ஒரு லேப்டாப்பை எடுத்து வச்சிருக்காரே... எதுக்கு?’’
‘‘லட்சுமி மேனன் ஸ்கூல் படிப்பை படிச்சு முடிச்சதும் இவர் கையால தரப் போறாராம்!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.