ஒரிஜினல் கம்பீரம்!




தர்ப்பூசணியை சிவப்பாக்க ரசாயன ஊசியா? நெஞ்சைப் பதற வைத்தது கட்டுரை. பத்து, இருபது ரூபாய் கிடைக்கும் ஒரு வியாபாரத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?
- எம்.எஸ்.இப்ராகிம், சென்னை-91.

வருடம் முழுவதும் படம் பார்க்க ஆயிரம் ரூபாய் சந்தா.... கோவில்பட்டி சண்முகா தியேட்டரின் இந்த ஐடியாவை எல்லா திரையரங்குகளும் கருத்தில் கொண்டால் படமும் ஓடும்... தியேட்டரும் வாழும்!
- வி.விக்னேஷ்வரன், சிவகாசி.

பிச்சைக்காரர்கள் என்றாலே எட்டி ஓடும் மனிதர்களுக்கு நடுவே தாராள மனதுடன் அவர்களைத் தொட்டுத் துலக்கி பளபளக்க வைக்கும் தமிழேந்தி-சென்னம்மாள் தம்பதி தியாகத்தின் மறு உருவங்கள்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக இயக்குநராகப் போகும் ‘சிசர்’ மனோகருக்கு வாழ்த்துகள். யார் தலையில் என்ன எழுதியிருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? முயலுங்கள், முன்னேறுங்கள்!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

ஆவிகளுடன் பேசக் கூடிய போனை எடிசன் கண்டுபிடிக்காமலே போய்ச் சேர்ந்தது நல்லதுதான்! இல்லாவிட்டால், போய்ச் சேர்ந்த பின்பும் பலருக்கு நிம்மதி கிடைத்திருக்காது; எடிசனுக்கும் கூட!
- ப.முரளி, சேலம்.

‘பதினாறு வயதினிலே’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘நான் ஒரு டைரக்டர்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்குப்பா’ என்று பாலசந்தர் பாராட்டியது தேசிய விருதுக்கும் மேலானதுதான்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

சைகை மொழி பற்றிய கட்டுரை அபாரம். எல்லோருக்கும் சைகை பற்றித் தெரிந்திருந்தாலும் புரியாத சில விஷயங்களும் அழகாக விளக்கப்பட்டிருந்தன. வெல்டன் அருண் சி.ராவ்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

இப்பவே ஹெல்மெட்டுக்குள்ள ஸ்மார்ட் போனை சொருகிட்டு பைக் ஓட்டி, டேமேஜாகறாங்க. இந்த லட்சணத்துல ஆப்பிள் வாட்ச்சைப் பார்த்துக்கிட்டே போனா என்னாகறது? அவ்ளோதான்..!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

ஹைட் அண்டு வெயிட்டாக அனுஷ்காவைப் பார்த்தாலே மகாராணி போலத்தான் இருப்பார். ‘ருத்ரமாதேவி’ ஸ்டில்களில் அவர் போட்டிருக்கும் நகைகள் மட்டுமல்ல... கம்பீரமும் ஒரிஜினல்!
- ஜி.கே.வெற்றிவேல்ராஜ், காங்கேயம்.