Like and Share



அண்ணே ஒரு விளம்பரம்...

கேன்சர் சிகிச்சை யில் தலைமுடியை முற்றிலும் இழந்த பெண்ணொருத்தி... காலை எழுந்ததும் அவள் தோற்றம் கண்டு அவளுக்கே கவலை. ஆனால், மெல்ல பொழுது புலர கணவனும் குழந்தையும் அவளோடு இயல்பாகப் பழகுகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அலுவலகம் செல்லும் அவளை சக பெண் ஊழியர்கள் கட்டிக் கொள்கிறார்கள். அவளை அழகான பெண்ணாக மதிக்கிறார்கள். முழுக்க முழுக்க இப்படி வசனமற்ற காட்சிகளே அணிவகுத்து நம்மை நெகிழச் செய்ய, ‘அழகு நம் உடலில் இல்லை... மனதில் இருக்கிறது’ என பேக்கிரவுண்டில் இசைக்கும் பாடல், தன்னம்பிக்கை டானிக். ‘சிலபேரின் அழகுக்கு தலைமுடி தேவையில்லை’ என்ற கனமான வார்த்தை களோடு முடிகிறது அந்த விளம்பரம். இது டாபர் வாடிகா ஹேர் ஆயிலின் விளம்பரம் என்பதே க்ளாப்ஸ் அள்ளும் ஃபைனல் டச்!

இன்ஸ்டாகிராமியம்!

டங்கா மாரி டூ ‘மாரி’... எப்படியெல்லாம் மாறணுமோ!
(‘மாரி’ ஷூட்டிங்கில் தனுஷ்)

அப்பா‘டெக்’கர்

சீனாவின் ஜியோமிக்கும் இந்திய மைக்ரோமேக்ஸுக்கும் கழுத்துப்பிடி காம்பெடிஷன் முற்றுகிறது. 6 ஆயிரம் ரூபாய்க்கு வந்த ஜியோமியின் ரெட்மி போன் போன வருடத்தின் கேம் சேஞ்சர். அதற்குப் போட்டியாக மைக்ரோமேக்ஸ் ‘சீu’   என ஒரு தனி பிராண்டே துவங்கி, யுரேகா மூலம் யூத்துகளைப் பிடித்தது. அதற்கடுத்து, இன்னும் பெரிய பெரிய டெக் அம்சங்களை சீப்பாகத் தரும் ‘ப்ராஜெக்ட் சீஸர்’ எனும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மை.மே. இதன் மூலம் வெளிவரப் போகும் போன்கள் ஆண்ட்ராய்டு லேட்டஸ்ட் பதிப்பான லாலிபாப்புடன் வருமாம்.

 ஜியோமியின் போன்கள் எல்லாமே பழைய ஆண்ட்ராய்டு கிட்கேட் பதிப்புதான் என்பதால், எதிரி ஒழிந்தான். ‘லாலிபாப் காலத்தில் ஏன் கிட்கேட்டோடு வாழ வேண்டும்? கிவ் மி எ ப்ரேக்!’ என ஒரு போஸ்டரை இதற்காகவே சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது மைக்ரோமேக்ஸ். அதில் வரும் ‘எம்’, ஜியோமி சின்னத்தை குறும்பாகக் குறிப்பதைப் பாருங்களேன்!

செல்(ஃபி)வாக்கு!

செல்ஃபியில ‘கை’ தெரியாதே!

கௌப்புறாய்ங்கய்யா...

‘மும்பையின் பாய் தாகூர் என்பவன் ஆபீஸிலும் வீட்டிலும் இன்கம் டாக்ஸ் ரெய்டு நடத்தியபோது கைப்பற்றிய பணம் இது. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு பணம் ஒரே இடத்தில் இதுவரை ரெய்டில் பிடிபட்டதில்லை...’- இப்படி ஒரு செய்தியோடு அடுக்கி வைத்த பணக்கட்டுகளும், பலர் பணம் எண்ணும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. ‘ஒரு ரெய்டிலேயே இவ்வளவு என்றால், இப்படி சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பலரது இடங்களையும் ரெய்டு செய்தால் என்ன?’ என எல்லோரையும் ரத்தம் கொதிக்கச் செய்யும் இந்தச் செய்தி உண்மையில் ஒரு மிகை வதந்தி.

ஆம், இந்தப் படங்களுக்கும் இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் அண்ணனும் தாதாவுமான பாய் தாகூர் என்பவனின் இடங்களை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் எனக் கைப்பற்றியது சுமார் ஐந்தரை கோடி. 13,500 கோடி என ஒரு நம்பரை யோசித்து, ஏதோ கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் படங்களைக் கோர்த்து ஹைடெக் வதந்தி பரப்பியது யார் என்பதுதான் இதுவரை மர்மம்!

வாட்ஸப் வாவ்!

தன் மூன்று மகள்களையும் கட்டிக் கொண்ட மருமகன்களை டெஸ்ட் பண்ண விரும்பினாள் ஒரு மாமியார். அதற்காக முதல் மகள் மற்றும் மருமகனுடன் படகு சவாரி போனாள். தடுமாறி விழுவது போல அவள் ஆற்றில் குதிக்க, முதல் மருமகன் சட்டென்று குதித்து அவளைக் காப்பாற்றினான். அடுத்த நாள் காலை அந்த முதல் மகள் வீட்டு வாசலில் புத்தம் புது ஸ்விஃப்ட் டிஸையர் கார் ஒன்று நின்றது. அதில், ‘மாமியாரின் அன்புப் பரிசு’ என எழுதியிருந்தது.

இரண்டாவது மகள் மற்றும் மருமகனுக்கும் இதே டெஸ்ட். அவனும் மாமியாரைக் காப்பாற்றினான். அந்த வீட்டு வாசலிலும் ஸ்விஃப்ட் டிஸையர். அதே மாமியாரின் அன்புப் பரிசு.மூன்றாவது மகள், மருமகனுக்கும் அதே டெஸ்ட் வைத்தாள் மாமியார். அவள் ஆற்றில் விழுந்து கதறியபோது மருமகன் அசரவே இல்லை.

 ‘‘மாப்பிள்ளை... உங்களுக்கு புது இனோவாவே வாங்கித் தாரேன், என்னைக் காப்பாத்துங்க!’’ என்றாள் மாமியார். ‘‘பொண்ண வளர்த்திருக்கா பாரு... உனக்கு வேணும்!’’ எனப் பேசாமல் நின்றுகொண்டான் மருமகன். பாவம் மாமியார், ஆற்றில் மூழ்கி இறந்தே போனாள்.அடுத்த நாள் மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் புத்தம் புது பி.எம்.டபிள்யூ நின்றது. அதில் எழுதியிருந்தது, ‘மாமனாரின் அன்புப் பரிசு!’