மத்திய பள்ளிகளில் ஆசிரியராக CTET தேர்வு



மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan), நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித்தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) 20.9.2015 அன்று நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்வை CBSE (Central Board of Secondary Education) அமைப்பு நடத்துகிறது. மத்திய அரசு பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கும் CTET தேர்வு பொருந்தும்.

தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.

இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டதாகும். தாள் - 1ல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். தாள் - 2ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். இரு பிரிவுகளிலும் பணிபுரிய விரும்புபவர்கள் இரு தாள்களிலும் தகுதி பெற வேண்டும்.யாரெல்லாம் CTET தேர்வை எழுதலாம்?

*1 முதல் 5ம் வகுப்பு வரையிலான (தாள்-1) தொடக்க நிலை பிரிவிற்கான தேர்வை எழுத கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்
+2 தேர்ச்சி பெற்று, 2 வருட  Elementary Education டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட Bachelor  of  Elementary Education  (B.EI.Ed) முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் சிறப்புக் கல்வியியல் பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
*ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டப் படிப்புடன் Elementary Education பிரிவில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*6 முதல் 8ம் வகுப்பு வரையிலான (தாள்-2) தொடக்க நிலைப் பிரிவிற்கான தேர்வை எழுத கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும் .
*பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Elementary Education பிரிவில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து அத்துடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*NCTE விதிப்படி குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட Bachelor in Elementary Education (B.EI.Ed.) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று 4 வருட பி.ஏ., பி.எட் அல்லது பி.எஸ்சி., பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் சிறப்புக் கல்வியியல் பிரிவில் ஒரு வருட பி.எட் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.
*கல்வியியல் பிரிவில் இளநிலை அல்லது டிப்ளமோ பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களும் CTET விண்ணப்பிக்கலாம். ஆனால், கல்வியியலில் தேர்ச்சி பெற்ற பின்னரே  CTET தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும்.
எப்படி விண்ணப்பிப்பது?

www.ctet.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்விற்கு, பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 தேர்வுக் கட்டணம்.

இரு தாள்களையும் சேர்த்து எழுத விரும்பும் பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.1000, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது செலானைப் பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயருக்கு CBSE கணக்கிற்கு Syndicate Bank, HDFC வங்கியில் செலுத்தலாம்.

கடைசி தேதி
ஆன்லைனில் விண்ணப்பிக்க :19.8.2015
விண்ணப்பக் கட்டணம் செலுத்த: 20.8.2015
அனுமதி கடிதம் பதிவிறக்க 4.9.2015
தேர்வு எப்போது?
தாள் - II: 20.9.2015 காலை 9.30 -12 மணி வரை.
தாள் - I: 20.9.2015 பிற்பகல் 2 - 4.30 மணி வரை
இரு தேர்வுகளும் தலா 2.30 மணி நேரம் நடைபெறும்.
பாடத்திட்டங்கள் மற்றும் முழுமையான
விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற இணைய
தளத்தைப் பார்க்கலாம்.

K.K. தேவதாஸ்