ஆற்றல் அறிவியல் படித்தால் அகிலமெல்லாம் வாய்ப்பு



எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.

ஆற்றல்கள், ஆற்றல்களின் வகைகள், நன்மை - தீமைகள் மற்றும் உற்பத்தியைப் பற்றி படித்தறியும் அறிவியலின் ஒரு பிரிவே ஆற்றல் அறிவியல் (Energy Science). இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பிரிவுகளின் கூட்டுறவால் உருவான நவீன பிரிவு இது. ஆற்றல்களே இன்றைய உலகை இயக்குகின்றன. உலகெங்கும் பெரும் வேலைவாய்ப்பு கொண்ட இந்தத் துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள், சாதனையாளர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘எந்த நாடு ஆற்றல் தேவையை முழுமையாக நிறைவேற்றி தன்னிறைவு அடைகிறதோ அந்நாடே வல்லரசு அந்தஸ்தை  பெறுகிறது. மனிதனின் செயல்பாடுகள், வசதி பெருக்கங்கள் காரணமாக ஆற்றலின் தேவை அதிக அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. வளர்ந்துவரும் நாடுகள் ஆற்றல் தேவைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதனால் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்திக்கிறது. வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளைப் பொறுத்தவரை சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைக் கொண்டு பெரிய பொருளாதார வளர்ச்சியினை உருவாக்க முடியும். ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் முழுமையடையவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்தியா ஓர் மிதவெப்ப மண்டல நாடு. நமக்கும் மிகப்பெரிய ஆற்றல் வளம் (Solar Energy)
உள்ளது. இன்னும் சில பத்தாண்டுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் வளங்கள் தீர்ந்துபோன பின்னர் இயற்கை ஆற்றலையே நம்பி வாழவேண்டிய கட்டாயம் உள்ளது. இச்சூழலில் ஆற்றல் அறிவியல் நிபுணர்களின் பங்களிப்பு பெருமளவு தேவைப்படும். மாணவர்கள் தாராளமாக இந்த்த துறையை தேர்வு செய்து படிக்கலாம். ஆற்றல் அறிவியல் துறை சார்ந்த படிப்புகள்/பிரிவுகள்

*Chemical Energy - வேதி ஆற்றல்
*Nuclear Energy    - உட்கரு ஆற்றல்
*Solar Energy - சூரிய ஆற்றல்
*Thermal Engineering -வெப்பப் ்பொறியியல்
*Electric Energy - மின்னாற்றல்
*Mechanical Energy - இயக்க ஆற்றல்
*Bio energy - உயிரி ஆற்றல்
*Magnetic Energy - காந்த ஆற்றல்
*Electromagnetic radiation - காந்த நிறமாலையியல்
*Electro Chemistry -மின் வேதியியல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்

*B.Sc.,  B.S., B.Tech., B.Eng., M.Sc., M.S., M.Tech. M.Eng
ஆற்றல் அறிவியல் துறையைக் கொண்ட இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...
*இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை
* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோலார் எனர்ஜி, பரிதாபாத்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் விண்ட் எனர்ஜி, சென்னை
* சர்தார் ஸ்வரண்சிங் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரினியூபிள் எனர்ஜி, பஞ்சாப்
* ஆல்டர்நேட் ஹைட்ரோ எனர்ஜி சென்டர், ரூர்க்கி
* தி எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடெல்லி
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கௌஹாத்தி
* திஸ்பூர் யுனிவர்சிட்டி, அசாம்

ஆற்றல் அறிவியல் துறையைக் கொண்ட உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

*யுனிவர்சிட்டி ஆஃப் மெக்சிகன் or மிச்சிகன், அமெரிக்கா (www.umich.edu)
*யுனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து (www.cam.ac.uk)
*யுனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து (www.ox.ac.uk)
*டென்மார்க் டெக்னிஸ்க் யுனிவர்சிட்டி, டென்மார்க் (www.dtu.dk)
*க்யோட்டோ யுனிவர்சிட்டி, ஜப்பான் (www.kyoto-u.ac.jp)
*யுனிவர்சிட்டி  ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
*ஓரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.oregonstate.edu)
*யுனிவர்சிட்டி ஆஃப் ரோசெஸ்டர், அமெரிக்கா (www.rochester.edu)
*ரைஸ் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.rice.edu)
*யுனிவர்சிட்டி ஆஃப் வியோமிங், அமெரிக்கா (www.wyoming.edu)

ஆற்றல் அறிவியல் துறையில் சாதித்த இந்திய வல்லுநர்கள் சிலர்...

* பேராசிரியர் டி.சி.பரூவா
* பேராசிரியர் டி.டேக்கா
* பேராசிரியர் ரூபம் கடாக்கி
* பேராசிரியர் நபின் ஷர்மா
* பேராசிரியர் பங்கஜ் கலித்தா
* பேராசிரியர் கோமதி நாயகம்
* பேராசிரியர் ஆர்.கே.பச்சூரி
* பேராசிரியர் சைலேஷ் நாயக்
* பேராசிரியர் பாலசுப்ரமணியம் கவாய்பட்டி
* பேராசிரியர் சேட்டன் சோலங்கி.

உலகப் புகழ்பெற்ற ஆற்றல் அறிவியல் துறை வல்லுநர்கள் சிலர்...

*பேராசிரியர் ஆண்ட்ரி மேரி ஆம்பியர்
*பேராசிரியர் ஜோகன்னஸ் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
*பேராசிரியர் ஆண்டர்ஸ் செல்சியஸ்
*பேராசிரியர் ருடால்ஃப் டீசல்
*பேராசிரியர் மேரி க்யூரி
*பேராசிரியர் மைக்கேல் பாரடே
*பேராசிரியர் மே.ஜெமிசன்
*பேராசிரியர் ஜே.பி.ஜூல்
*பேராசிரியர் நிக்கோலா டெஸ்லா
*பேராசிரியர் ரோஸலின் யாலோ

ஆற்றல் அறிவியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆய்வுகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும் உலக அளவில் இயங்கும் அமைப்புகள்/ குழுக்கள்

*எனர்ஜி அசோசியேஷன் ஆஃப் இண்டியா, இந்தியா
*யுனைடெட் ஸ்டேட்ஸ் எனர்ஜி அசோசியேஷன், அமெரிக்கா
*எனர்ஜி அசோசியேஷன் ஆஃப் பென்சில்வேனியா, அமெரிக்கா
*ஜியோ தெர்மல் எனர்ஜி அசோசியேஷன், அமெரிக்கா
*ஆப்ரிக்கன் எனர்ஜி அசோசியேஷன், ஜாம்பியா
*வேர்ல்டு விண்ட் எனர்ஜி அசோசியேஷன், அமெரிக்கா
*ஒண்டாரியோ எனர்ஜி அசோசியேஷன், கனடா
*ஐரிஷ் சோலார் எனர்ஜி அசோசியேஷன், அயர்லாந்து
*ஹவாய் சோலார் எனர்ஜி அசோசியேஷன், ஹவாய்
*கனடியன் விண்ட் எனர்ஜி அசோசியேஷன், கனடா

ஆற்றல் அறிவியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ பதக்கங்கள்/ விருதுகள்

*எஸ்ஸோ எனர்ஜி அவார்ட்- ராயல் சொஸைட்டி, லண்டன்
*குளோபல் எனர்ஜி ப்ரைஸ், ரஷ்யா
*எனி அவார்டு, அமெரிக்கா
*சால்ட்டைர் ப்ரைஸ் மெடல், ஸ்காட்லாந்து
*தி லே ஆன் கோன் ப்ரைஸ், அமெரிக்கா
*தி கார் கட்லர் எனர்ஜி ப்ரைஸ், அமெரிக்கா
*ஸ்டூடண்ட் அவார்டு, ஐஐடி மெட்ராஸ், சென்னை
*பெய்பி மெடல், ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, இங்கிலாந்து
*பெய்ன்-கபோஸ்கின் மெடல், அமெரிக்கா
*யங் சயின்டிஸ்ட் அவார்ட், இந்தியா

ஆற்றல் அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

*மினிஸ்ட்ரி ஆஃப் பவர், இந்திய அரசு
*மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அண்ட் ரினியூபிள் எனர்ஜி, இந்திய அரசு
*ப்ரூய் ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி, புதுடெல்லி
*பாபா அடாமிக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மும்பை
*மினிஸ்ட்ரி ஆஃப் பெட்ரோலியம் அண்டு ேநச்சுரல் கேஸ், புதுடெல்லி
* மினிஸ்ட்ரி ஆஃப் கோல், இந்திய அரசு
*ஆற்றல் துறையைக் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்
* ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, டேராடூன்
*டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி,

இந்திய அரசு

* தனியார் ஆற்றல் ஆய்வு மையங்கள்அடுத்த இதழில் பலபடி உயிரியல் (Polymer Science)

தொகுப்பு: வெ.நீலகண்டன்