வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்



ஒரு  தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.

வெளிநாட்டுக் கல்வியில் மிக முக்கியமான கட்டம், விசா பெறுவதுதான். கல்வி நிறுவனம் உங்களைத் தேர்வு செய்தபிறகு விசா கிடைப்பதில் சிக்கல் நேர்ந்தால், உங்கள் கனவு பாதிக்கப்படலாம். அதனால் விசா நடைமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு இறங்குவது அவசியம். வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். இருந்தும் உங்களிடம் இருக்கிற சுய முனைப்பும் தைரியமுமே இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும்.

விசா வழங்குவதற்கான நடைமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். ஆனால், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் விசா பெறுவதற்கு மிகப் பொதுவான ஒரு நடைமுறை, நேர்காணல். உண்மையிலேயே கல்விக்காகத்தான் தங்கள் நாட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறியவும், தங்கள் நாட்டுக்கு வரும் மாணவன் குறைந்தபட்ச தகுதியுடன் வருகிறானா என்பதைச் சோதிக்கவுமே இந்த நேர்காணல். கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் விசாவுக்கு நேர்காணல் செய்வதில்லை. ஆனால் அந்தப் பொறுப்பை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. தவறு செய்ய நினைப்பவர்கள் அந்த ‘செக் பாயின்ட்’களிலேயே தேங்கி விடுவார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விசாவுக்கு நேர்காணலை மிக முக்கியக் கட்டமாக வைத்திருக்கின்றன. இந்த நேர்காணலில் மாணவனின் உண்மையான தன்மையை அவர்கள் கண்டறிந்துவிடுகிறார்கள். ‘இம்மாணவன் நம் நாட்டுக்குச் சுமையாக இருப்பான்’ என்று கருதினால் தயவு தாட்சண்யமின்றி
விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள். நேர்காணல் 15 முதல் 20 நிமிடமே நடக்கும். தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் மாணவன் இந்த நேர்காணலில் பங்கேற்க வேண்டும். ‘மோட்டிவேஷன் லெட்டர்’ பற்றி கடந்த இதழில் பார்த்தோம் இல்லையா...

அதில் உள்ள அம்சங்களை உள்ளடக்கியே இந்த நேர்காணல் இருக்கும். ‘இந்த நாட்டை, கல்வி நிறுவனத்தை, படிப்பை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்’, ‘யார் பரிந்துரை செய்தது’, ‘நீங்களாகவே தேர்வு செய்திருந்தால் என்ன நோக்கத்தில் தேர்வு செய்தீர்கள்’, ‘எங்கள் நாட்டைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்’, ‘வேறெந்தெந்த கல்வி நிறுவனங்களை, நாடுகளை தேர்வு செய்து நிராகரித்தீர்கள்’ என பல்வேறு கேள்விகள் கேட்பார்கள். பொருளாதாரம் பற்றியும் கேட்பார்கள். ‘கல்வி நிறுவனத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?’ என்ற கேள்வியும் வரும். ‘எங்கே தங்குவீர்கள்’, ‘கல்வி நிறுவனத்திற்கு எப்படி செல்வீர்கள்’ என்றும் கேட்பார்கள். தயக்கமின்றி பதில் அளிக்க வேண்டும்.

ஒரு காலத்தில், உங்கள் படிப்பு எத்தனை வருடமோ அத்தனை வருடத்துக்கு விசா கொடுத்துவிடுவார்கள். இப்போது அப்படி யில்லை. வெறும் 1 மாதத்திற்கான விசா மட்டுமே உங்களுக்குத் தருவார்கள். நீங்கள் அந்த நாட்டுக்குப் போய் இறங்கிய பிறகு, உங்களுக்கு அருகாமையில் இருக்கிற அஞ்சல் நிலையத்தில், உங்களைப் பற்றிய முழு விவரத்தையும் கொடுத்து, (கைரேகை, கருவிழிப் படம் வரை) பயோமெட்ரிக் கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

விசா நேர்காணலில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளை கீழே தருகிறேன். இந்த உதாரணக் கேள்வித்தொகுப்பு இங்கிலாந்து நாட்டுக்கானது. பிற நாடுகளுக்கும் இது பொருந்தும். நெடுங்கால அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்விக்கு தயாராகும் மாணவர்கள் கூடவே இந்தக் கேள்விகளுக்கான விடையையும் தயாரித்துக்கொண்டால் விசா நடை
முறைகளை டென்ஷன் இல்லாமல் எளிதாக முடிக்க முடியும்.

Intention to study:

1.Why do you want to study in the UK?
2.What are the benefits of studying in the UK compared to your home country or the USA/Australia/Canada etc..
3.How did you go about choosing which University to study at in the UK?
4.What facilities do you expect there to be your University?
5.Why have you chosen to study at this university ?
6.Will you need help finding accommodation?
7.Which other universities did you consider?
8.Where is your university?
9.Do you know anyone who has already studies at this university?
10.Do you know roughly how large the University is?
11.Why did you choose to study this course and how does it relate to your previous study?
12.What qualification will you receive?
13.How can you explain any gaps in your years of study or of work?
14.How will the course you have chosen help you in your chosen career path?
15.How is your chosen course assessed?
16.How long does your course last?
17.Do you know what level your course is?
18.Did you consider studying any other course?
19.After you have completed your course do you think you will stay in the UK to complete another higher level course of study?
20.Does your University have a meet and greet service?
21.Do you understand what your responsibilities will be as a Tier 4 student?

Financial queries:

22.What is your current occupation?
23.Do you have relatives who have studied at a similar level or have studied overseas?
24.Do you think your course is appropriate for someone of your age?
25.Who is financing your studies?
26.What is the profession of your financial sponsor and what relationship are they to you?
27.Do you have evidence of the financial status of your financial sponsor?
28.Are you able to verify the genuineness of these documents?
29.Can you prove that this money is available for your study?
30.Would you be able to pay your tuition fees in one full amount?
31.Have you checked the University refund policy?
32.Do you know how much accommodation will cost in the UK?
33.Do you know how much your living expenses will be?
34.Do you know whether you are entitled to work part-time in the UK?
35.Do you know how many hours you will be able to work?
36.Do you know the likely hourly rate of pay for part-time work in the UK?
37.How reliant are you on being able to work when you are in the UK?