IIFT நிறுவனத்தில் MBA சர்வதேச வணிகம் படிக்க ஆசையா?



கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.

நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க!

Indian Institute Of Foreign Trade (IIFT) எனப்படும் ‘இந்திய அயல்நாட்டு வணிக நிறுவனம்’ 1963ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தை உலகளாவிய நிலையில் மேம்படுத்துவதற்கான காரணிகளைக் கண்டறிவதுடன் அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது. புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இயங்கும் இந்த நிறுவனம், பட்டதாரிகளுக்கு சர்வதேச வணிகம் சார்ந்த படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப் படிப்புகள் பற்றி விவரிக்கிறார் கல்வியாளரும் ‘ஸ்டூடன்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.   

 இந்நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள்

*MBA (International Trade) - 2 வருட படிப்பு (புதுடெல்லி மற்றும் கொல்கத்தா வளாகங்களில்)
*MBA (International Trade) - 3 வருட பகுதி நேரப் படிப்பு (புதுடெல்லி மற்றும்
கொல்கத்தா வளாகங்களில்)
*Executive Post Graduate Diploma in International Business (EPGDIB) - 18 மாதங்கள் (டெல்லி வளாகத்தில் மட்டும்)
*Export  Management  Certificate  Course  - 4 மாதங்கள் (டெல்லி வளாகத்தில் மட்டும்)

 யாரெல்லாம் இந்தப் படிப்புகளில் சேரலாம்?

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்சவரம்பு இல்லை. தற்போது இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு கலந்துரையாடல், கட்டுரை எழுதுதல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 22.11.2015 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடக்கும். அகமதாபாத், அலகாபாத், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்விற்குப்பின் மற்ற தேர்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சென்னை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை போன்ற இடங்களில் நடைபெறும். அயல் நாட்டினர், வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் GMAT மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்
படுவார்கள்.

 எவ்வாறு விண்ணப்பிப்பது?

http://edu.iift.ac.in/iift/landing/index.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  IIFT Bhawan, B-21, Qutab Institutional Area, New Delhi-110 016. (Telephone +91-11-26965124, +91-11-26965051) என்ற முகவரியில் அஞ்சல் வழியாகவும் விண்ணப்பம் கோரலாம். பொதுப் பிரிவினர் 1,550 ரூபாய்க்கும், SC / ST பிரிவினர் 775 ரூபாய்க்கும் ‘Indian Institute of Foreign Trade’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். 
 அஞ்சலில் விண்ணப்பம் பெற இறுதி நாள்: 28.8.2015. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 3.9.2015. 
 தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?
(1) எழுத்துத் தேர்வு
(2) கலந்துரையாடல்
(3) நேர்முகத் தேர்வு

என மூன்று நிலைகளில் நடைபெறும்.ஆங்கிலம் - பத்தியைப் படித்து விடையளித்தல்,     பொது அறிவு, லாஜிக்கல் ரீசனிங், குவான்டிடேடிவ் அனாலிஸிஸ் ஆகியவை சார்ந்து கேள்விகள் இடம்பெறும்.

தொகுப்பு: வெ.நீலகண்டன்