வேலை ரெடி!
வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...
 உர நிறுவனத்தில் எஞ்சினியர்
 நிறுவனம்: அரசின் உர நிறுவனமான நேஷனல் ஃபெர்டிலைஸர்ஸ் லிமிடெட். வேலை: பல்வேறு துறைகளில் ஜூனியர் எஞ்சினியரிங் அசிஸ்டென்ட் தகுதியிலான வேலை காலியிடங்கள்: மொத்தம் 39. இதில் புரொடக்ஷன் 19, மெக்கானிக்கல் 7, எலெக்ட்ரிக்கல் 4 மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் 9 கல்வித் தகுதி: புரொடக்ஷன் துறைக்கு பி.எஸ்சியும் மற்ற துறைகளுக்கு அந்தந்த துறைகளில் எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும் அவசியம் வயது வரம்பு: 18 - 30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.nationalfertilizers.com
10வது படித்தவர்களுக்கு விமானத்துறை வேலை
நிறுவனம்: ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா வேலை: ஜூனியர் அசிஸ்டென்ட் (ஃபயர் சர்வீஸ்) காலியிடங்கள்: 52 கல்வித் தகுதி: பத்தாவது படிப்புடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் ஃபையர் சர்வீஸ் துறைகளில் டிப்ளமோ படிப்பு, அல்லது +2 தேர்ச்சி வயது வரம்பு: 18 - 30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero
அமின் நிலையத்தில் டிரெயினி
நிறுவனம்: கல்பாக்கத்திலுள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலை: டெக்னீஷியன் ‘பி’ பிரிவில் ஸ்டை ஃபண்ட் ட்ரெயினி வேலை காலியிடங்கள்: 42. இதில் ப்ளான்ட் ஆபரேட்டர் துறையில் 12, எலெக்ட்ரீஷியன் 5, எலக்ட்ரானிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 6, ஃபிட்டர் 19 கல்வித் தகுதி: முதல் துறைக்கு மட்டும் +2 படிப்பு. பிற வேலைகளுக்கு பத்தாவது படிப்புடன் அந்தந்த துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.npcil.nic.in
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றி கொள்ள முடியும்.
இண்டியன் ஆயிலில் எஞ்சினியர்
நிறுவனம்: ஐ.ஓ.சி.எல் எனப்படும் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் குஜராத் கிளை வேலை: எஞ்சினியரிங் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலியிடங்கள்: 28 கல்வித் தகுதி: பி.இ, பி.டெக் அல்லது ஏதாவது ஒரு டிகிரி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 27.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com
அரசு கப்பல் நிறுவனத்தில் பணி
நிறுவனம்: விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய ராணுவத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் வேலை: 1. ஸ்டோர் சூப்பிரண்டென்ட் 2. ஸ்டோர் கீப்பர் காலியிடங்கள்: முதல் பிரிவில் 35, இரண்டாவது பிரிவில் 184 கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு அறிவியல் பாடங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது +2 படிப்புக்குப் பிறகு 5 வருட வேலை அனுபவம் தேவை. இரண்டாவது வேலைக்கு +2 படிப்புடன் ஒரு வருட வேலை அனுபவம் அவசியம். வயது வரம்பு: 18-25 தேர்வு முறை: நேர்முகம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: http://irfc-nausena.nic.in/
‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் பேராசிரியர்
நிறுவனம்: எய்ம்ஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ மையத்தின் புவனேஷ்வர் கிளை வேலை: 4 பிரிவுகளில் பேராசிரியர் பணி காலியிடங்கள்: மொத்தம் 244. இதில் புரொபசர் 43, அடிஷனல் புரொபசர் 38, அசிஸ்டென்ட் புரொபசர் 73, மற்றும் அஸோசியேட் புரொபசர் 90 கல்வித் தகுதி: எம்.டி, எம்.டி.எஸ், எம்.எஸ் போன்ற மருத்துவ முது கலைப் படிப்பு வயது வரம்பு: 50க்குள் தேர்வு முறை: நேர்முகம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhubaneswar.edu.in
வேளாண் துறையில் விஞ்ஞானி
நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அக்ரிகல்ச்சுரல் சயின்டிஸ்ட் ரிசர்ச் போர்டு (வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம்) வேலை: பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளர் பணி காலியிடங்கள்: மொத்தம் 48. இதில் ஹெட் ஆஃப் டிவிஷன் எனும் துறையில் அதிகபட்சமாக 33 இடங்கள் காலியாக உள்ளன. கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில் டாக்டரேட் எனும் பிஎச்.டி முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு: 60 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 19.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.asrb.org.in
சி.ஐ.எம்.எஃப்.ஆர்-ல் ஸ்டெனோ
நிறுவனம்: ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்திலுள்ள சி.ஐ.எம்.எஃப்.ஆர் எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மைனிங் அண்ட் ஃப்யூல் ரிசர்ச் வேலை: பல்வேறு பிரிவுகளில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டெனோ காலியிடங்கள்: மொத்தம் 18. இதில் டெக்னிக்கல் துறை மட்டுமே 5 பிரிவுகளாக துறை வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளில் மொத்தமாக 17 காலியிடங்களும், ஸ்டெனோ துறைக்கு மட்டும் 1 காலியிடமும் குறிப்பிடப்பட்டுள்ளது கல்வித் தகுதி: டெக்னிக்கல் துறையில் உள்ள 5 பிரிவுகளுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. பி.எஸ்சி கெமிஸ்ட்ரி/ ஃபிசிக்ஸ், +2 போன்ற தகுதிகள் எதிர்பார்க்கப் படுகின்றன. ஸ்டெனோ வேலைக்கு பத்தாவது படிப்பு அல்லது +2 படிப்புடன் டைப்பிங் திறனிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: பெரும்பாலான டெக்னிக்கல் துறை வேலைக்கு அதிகபட்ச வயது 33 மற்றும் 38. ஸ்டெனோ வேலைக்கு அதிகபட்ச வயது 33 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.8.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.cimfr.nic.in
|