ஊட்டச்சத்து உணவியல் படித்தால் வேலை உறுதி



என்ன படிக்கலாம்?

மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் உணவு ஏற்படுத்தும் உடற்செயலியல் மாற்றங்கள் மற்றும் விளைவுகள் குறித்து படித்தறிய உதவும் அறிவியல் பிரிவே ஊட்டச்சத்து உணவியல் (Nutrition And Dietician). நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள், சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள், எந்த வயதினருக்கு என்ன சத்துக்கள் தேவை என்பன உள்ளிட்ட மனிதனின் வாழ்வோடு இணைந்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் அறிவியல் துறை இது. இத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

“தற்காலத்தில் மாறி வரும் உணவுப்பழக்கம்? உணவுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்புகள், பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளையும் இத்துறை முன்னெடுக்கிறது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப சத்தான உணவுப் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் இத்துறை சார்ந்த நிபுணர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. வேலைவாய்ப்பு மிக்க இத்துறையை மாணவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம்.

ஊட்டச்சத்து உணவியல் துறை சார்ந்த படிப்புகள்/பிரிவுகள்

* Nutrigenomics- உணவு மரபியல்
* Nutrition Physiology- உணவு செயலியல்
* Prenatal Nutrition- குழந்தை உணவூட்டம்
* Sports Nutrition- விளையாட்டு உணவூட்டம்
* Bio safety- உயிரியல் பாதுகாப்பு
* Food Politics- உணவு அரசியல்
* Food Preservation- உணவுப் பாதுகாத்தல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc., B.S., M.Sc., M.Phil., Ph.D., D.phil., Diplomo

ஊட்டச்சத்து உணவியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள்

* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
* எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை
* ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
* மஹாராஜா கல்லூரி, ஈரோடு
* பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
* காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, சென்னை
* எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, சென்னை
* பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை
* அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, திருவண்ணாமலை
* பெண்கள் கிறித்தவக் கல்லூரி, சென்னை
* டி.கே.எம். பெண்கள் கல்லூரி, வேலூர்




ஊட்டச்சத்து உணவியல் துறை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள்

* ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப், யு.ஜி.சி., புதுடெல்லி
* ஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி, யு.ஜி.சி., புதுடெல்லி
* ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப், சி.எஸ்.ஐ.ஆர்., புதுடெல்லி
* ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், ஐ.சி.எம்.ஆர்., புதுடெல்லி
* யங் சயின்டிஸ்ட், டி.எஸ்.டி., புதுடெல்லி
* நேஷனல் போஸ்ட் டாக்டோரல் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி., புதுடெல்லி
* மெரிட் ஸ்காலர்ஷிப், யு.ஜி.சி., புதுடெல்லி
* ஊட்டச்சத்து உணவியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்/ குழுக்கள்
* சிங்கப்பூர் நியூட்ரிசன் & டயடிக்ஸ் அசோசியேசன், சிங்கப்பூர்
* இண்டியன் டயடிக்ஸ் அசோசிேயசன், இந்தியா
* நியூட்ரிசன் சொசைட்டி ஆஃப் இண்டியா, இந்தியா
* அனிமல் நியூட்ரிசன் சொசைட்டி ஆஃப் இண்டியா, இந்தியா

ஊட்டச்சத்து உணவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள்

* ஜே.என்.போஸ் அவார்டு
* கே.ஜி.நாயுடு அவார்டு
* சகர்மால் கோங்கா அவார்டு
* ஏ.என். ராதா அவார்டு, 
இந்த நான்கு விருதுகளும் இண்டியன் டையடிக் அசோசியேசன் சார்பில் வழங்கப்படுகிறது.
* டாக்டர். சி.கோபாலன் அவார்டு
* டாக்டர்.எஸ்.ஜி.காண்டியா அவார்டு
* ராஜம்மாள் அவார்டு
* யங் சயின்டிஸ்ட்ஸ் அவார்டு
* ராமநாதன் அவார்டு
* சீத்தாராம் பட் அவார்டு இந்த 6 விருதுகளும் ஹைதராபாத்தில் உள்ள நியூட்ரிசன் சொசைட்டி ஆஃப் இண்டியா அமைப்பால் வழங்கப்படுகிறது.

ஊட்டச்சத்து உணவியல் துறை பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், உத்தேச மாத சம்பளம்

* டயடீசியன் -    25,000 - 50,000
* உதவிப் பேராசிரியர்- 35,000 - 75,000
* நியூட்ரிசன் ஆபீசர்- 25,000 - 50,000
* நியூட்ரிசன் கவுன்சிலர்- 27,000 - 45,000
* நியூட்ரிசனிஸ்ட்    - 25,000 - 50,000
* டயடீசியன் கவுன்சிலர்-35,000 - 50,000
* ஆய்வாளர்- 25,000 - 35,000
* டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-15,000 - 25,000
* சயின்டிஸ்ட்- 55,000 - 1,25,000
* டெக்னிக்கல் ஆபீசர் - 25,000 - 65,000

ஊட்டச்சத்து உணவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் நிறுவனங்கள்

* இந்திய வேளாண் அமைச்சகம்
* இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
* இந்திய சுகாதார அமைச்சகம்
* அரசு மற்றும் தனியார் உணவு பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள்
* மத்திய மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்
* அரசு மற்றும் தனியார் ஆய்வு அமைப்புகள்
* உணவுத் தொழிற்சாலைகள்

- அடுத்த இதழில் கடல் உயிரியல் (Marine Biology)
தொகுப்பு: வெ.நீலகண்டன்