வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

பிளஸ் டூ படித்தவர்கள் ராணுவ வீரராகலாம்!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் அடிப்படையிலான பர்மனன்ட் கமிஷனின் ராணுவ வீரர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 90
கல்வித் தகுதி: பிளஸ் டூ படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன்
தேர்வாகியிருக்க வேண்டும்
வயது வரம்பு: 16 1/2 முதல் 19 1/2 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

யூகோ வங்கியில் 100 வேலை!


நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி
வேலை: சார்ட்டட் அக்கவுன்டன்ட் எனும் அதிகாரி பணி
காலியிடங்கள்: மொத்தம் 100. இதில் பொதுப்பிரிவினருக்கு 49, ஓ.பி.சி பிரிவினருக்கு 29, எஸ்.சி பிரிவினருக்கு 15, எஸ்.சி பிரிவினருக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: சி.ஏ படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு
வயது வரம்பு: 21 முதல் 35 வரை (சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதில் தளர்ச்சி உண்டு)
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ucobank.com

விமானப்படையில் பலவித பணிகள்!

நிறுவனம்: இந்திய விமானப்படையின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமையகம்
வேலை: சஃபைவாலா, குக், மெஸ் ஸ்டாஃப் போன்ற 12 பிரிவுகளில் குரூப் சி அடிப்படையிலான சிவிலியன் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 39. இதில் சஃபைவாலா (10), குக் (8), மெஸ் ஸ்டாஃப் (8) ஆகியவை அதிகபட்ச வேலைகளைத் தருகின்றன.
கல்வித் தகுதி: 10 வது அல்லது பிளஸ் டூ படிப்பு
வயது வரம்பு: இந்தி டைப்பிஸ்ட் வேலைக்கு மட்டும் 18-27, மற்றவை அனைத்துக்கும் 18-25
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.indianairforce.nic.in



பத்தாவது படிப்புக்கு மத்திய அரசு வேலை!

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்
வேலை: எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் வேலை. இவை தொழில்நுட்பம் சாராதவை.
காலியிடங்கள்: மொத்தம் 122
கல்வித் தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 18-25 (சில பிரிவினருக்கு அரசு
விதிகளின்படி வயது வரம்பில்  தளர்ச்சி உண்டு)
தேர்வு முறை: எழுத்து
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.ssc.nic.in

ஐ.டி.ஐ படிப்புக்கு அரசு மருத்துவமனை வேலை

நிறுவனம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமருத்துவமனை
வேலை: சயின்டிஃபிக் ஆபீஸர், நர்ஸ், டெக்னீஷியன் போன்ற சில பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 21. இதில் டெக்னீஷியன் வேலையில் மட்டுமே 10 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: அதிகபட்ச வேலைகளை வழங்கும் டெக்னீஷியன் வேலைக்கு 10வது படிப்புடன் துறைக்கு ஏற்ப ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: டெக்னீஷியன் வேலைக்கு 25க்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.igcar.gov.in

வணிகவியல் படிப்புக்கு தமிழ்நாடு அரசு வேலை!

நிறுவனம்: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
வேலை: கணக்கர் மற்றும் இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: முதல் வேலையில் 5, இரண்டாம் வேலையில் 4 இடங்கள் காலியாக உள்ளன. சில பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உண்டு.
கல்வித் தகுதி: கணக்கர் வேலைக்கு வணிகவியலில்
டிகிரியும், இளநிலை உதவியாளர் வேலைக்கு பிளஸ் டூ தேர்ச்சியும் அவசியம்
மேலதிக தகுதி: முதல் வேலைக்கு 2 வருட வேலை அனுபவமும், இரண்டாம் வேலைக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுத் திறன் மற்றும் அரசின் ஆட்டோமேஷன் கணினிக் கல்வியில் சான்றிதழ் படிப்பும் தேவை
வயது வரம்பு: 30க்குள்
விண்ணபிக்க கடைசித் தேதி: 20.11.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.poompuhar.org

தொகுப்பு: டி.ரஞ்சித்