அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



Sorry - Excuse me
சேலம் ப.சுந்தர்ராஜ்


காலை 10 மணி. ரகு லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தார். வழக்கம்போலவே காலதாமதமாக உள்ளே நுழைந்தான் ரவி.
“ரவி... நிறைய வார்னிங் (Warning) கொடுத்திட்டேன். ஆனா இன்னைக்கும் லேட்டாவே வர்றீங்களே...!”
சற்று கோபமாக கேட்டார் ரகு.   
“ஸாரி சார்(Sorry Sir)...” - முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு சொன்னான் ரவி. உடனடியாக ரகுவின் கோபம் காணாமல் போய்விட்டது. ஜாலியானார்.
“ரவி, எல்லாத்துக்கும் ‘ஸாரி’, ‘ஸாரி’ங்கிறமே... ‘ஸாரி’ன்னா என்ன பொருள் தெரியுமா...?”
“ ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’ன்னு அர்த்தம் சார்...” -ரவி சீரியஸாக சொல்ல ரகு சிரித்தார்.
“இல்லை ரவி... ‘Sorry’-ங்கிறது ‘I feel sorry’-ங்கிறதோட சுருக்கம். ‘நான் வருந்துகிறேன்’-ன்னு பொருள். நிறைய பேர் ‘sorry’-ன்னா ‘மன்னிப்புக் கேட்கிறது’ன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. ‘Excuse me’-ன்னு சொன்னா தான் ‘மன்னிச்சுங்கோங்க’ன்னு பொருள். அது பணிஞ்சு சொல்ல வேண்டிய வார்த்தை. ஆனா, ‘Excuse me’-யை நிறைய பேர் அதிகாரத் தோரணையில உச்சரிப்பாங்க. அதேமாதிரி, ஒரு அறைக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடி மரியாதை நிமித்தம் ‘Excuse me’-ன்னு சொல்லணுன்னு நினைக்கிறாங்க. நாம ஒவ்வொரு முறை ‘Excuse me’ சொல்லும்போதும் மன்னிப்பு தான் கேட்டுக்கிட்டு இருக்கோம்...”



“அப்போ sorry-ங்கிற வார்த்தையை எப்போ உபயோகப்படுத்தணும் சார்...”- ரவி கேட்டான்.
“மன வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில(Sorrowful), Sorry-யை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு,
‘I am sorry that your mother is in hospital again’ - ‘அம்மாவை மறுபடியும் ஆஸ்பத்திரில சேத்திருக்காமே. மனசு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...’
அதேமாதிரி ஏமாற்றமான சூழல்லயும் (Disappointing condition) பயன்படுத்தலாம்.
‘The business in a very sorry state’- ‘வியாபாரம் ரொம்ப மந்தமான நிலையில இருக்கு’
வருத்தமான செய்தியைச் (Before giving a bad news) சொல்லும்போதும் பயன்படுத்தலாம்.  
‘I am sorry to tell you that you are not selected’- ‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு
வருந்துகிறேன்’
‘Sorry’-ங்கிறது எண்ணத்தின் வெளிப்பாடு. regret, remorse, repent, pensive, penitent-ன்னு இதே பொருளைத் தருகிற  வார்த்தைகள் நிறைய இருக்கு. சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி அந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்... புரியுதா...?”
“நல்லாப் புரியுது சார்... போனமுறை நான் கேட்ட சந்தேகத்துக்குத்தான் இன்னும் நீங்க பதிலே சொல்லலே...”
“ஓ... மறந்துட்டேன்... Fortnight பற்றித்தானே கேட்டீங்க... Night-ன்னா இரவுன்னு தெரியும்... Fortnight-ன்னா ‘இரண்டு வாரங்கள்’ன்னு பொருள். ஓ.கே.வா...?
“டபுள் ஓ.கே. சார்...” - ரவியும் லேப்டாப்பிற்குள் மூழ்கினான்.