பூங்கா சிற்பம்!



இத்தாலியின் மிலன் நகரில் இருக்கும் ட்ரையனல் பூங்காவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிற்பமே இது. இதன் விநோதக் கரங்களுக்கிடையே மனிதர்கள் தலை கொடுத்து நிற்கலாம். ராபர்ட் வில்ஸன் என்ற புகழ்பெற்ற சிற்பி வடிவமைத்தது இது.

கலைகளையும் மானுடவியலையும் கற்றுத் தருவதற்காக அவர் ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வருகிறார்கள்.