ஒரு எழுத்தின் வரலாறு!



முத்தாரத்தில் வெளிவரும் அனைத்து தகவல்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படித்து தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் உள்ளன. 
- ஆர்.பால்பாண்டி, மதுரை.

மிகவும் அழகான ‘ஆர்க்கிட்’ மலர்களைப் பற்றிய தகவல் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

ஒரு எழுத்து கொண்ட ‘ஈ’ யின் வாழ்க்கை வரலாறு நீளமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. இதற்காகவே அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட் ‘பூச்சிப் பூக்கள்’ பகுதிக்கு!
- ரா.வனிதாமணி, விழுப்புரம்.

‘நமது பிரதமர்கள் என்ன படித்திருக்கிறார்கள்?’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அற்புதம்.
- ஏ.சி.புகழேந்தி, ஈரோடு.

‘வலிப்பு நோய்க்கு அஞ்ச வேண்டாம், புது டெக்னாலஜி வந்தாச்சு’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்த ‘மெடிக்கல் மிராக்கிள்’ பகுதிக்கு நன்றி!
- கி.புனிதா குமார், புதுச்சேரி.

‘நம்பினால் நம்புங்கள்’ பகுதியில் வரும்   தகவல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. குறிப்பாக ‘இறாலின் இதயம் அதன் தலையில் உள்ளது’ என்பதும், ‘வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே’ என்பதும் அரிய தகவல்கள்!
- டி.கே.விஸ்வநாதன், கடலூர்.