நிலவில் கடல்!



படத்தில் இருப்பது சனி கிரகத்தின் என்செலடஸ் என்ற சனி நிலவின் குறுக்கு வெட்டு தோற்றம். இந்த நிலவின் பாறை போன்ற தரைக்கு அடியில் கடல் ஏதேனும் இருக்கலாம் என்கிறார்கள் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்.

சனி கிரகத்தின் வளையங்களில் சேர்ந்திருக்கும் தூசுகளுக்கு இந்தக் கடலிலிருந்து ஆவியாகும் மினரல்களே காரணமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. இந்த நிலவில் கடல் இருக்கும்போது, அந்தக் கடலில் உயிரினங்களும் வசிக்கக்கூடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே அதற்கான ஆராய்ச்சி இப்போது தொடர்கிறது.