தெரிந்து கொள்ளுங்கள்




வெற்றி வேண்டுமா?

புதிது புதிதாக ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையும் பெற்றவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒருவர் முன்னேற விரும்பினால் இந்த ஒரே ஒரு வாசகத்தைப் பின்பற்றினால் போதும் என்கிறார். அந்த வாசகம் ‘கடிகாரத்தை ஒருபோதும் பார்க்காதீர்கள்’ என்பதே!

மாறாத மக்கள்!

பாம்புக்கறியை மிக விருப்பமாக உண்ணும் மக்கள் உலகில் இரண்டு நாடுகளில் உள்ளனர். ஒன்று ஜப்பான், இன்னொன்று சீனா.

தகவல் நேரம்!

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி நடந்தபோது, அந்தத் தகவல் 1.3 விநாடி நேரத்தில் பூமியை வந்தடைந்தது.

அம்மாடியோவ்!

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் முப்பதாயிரம் கிலோ உணவு சாப்பிடுகிறான்.

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.