முதலை மூதாதையர்!



அந்தக் காலத்தில் முதலைகள் நிலத்தில் வாழ்ந்தன; அது மட்டுமில்லை... பின்னங்கால்கள் இரண்டை மட்டும் தரையில் ஊன்றி, நம்மைப் போல நடக்கவும் செய்தன. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கிடைத்த பாறைப் படிமங்களிலிருந்து உருவாக்கப்பட்ட அந்த முதலையின் மாதிரி வடிவம் இது!

23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இதற்கு ‘கார்னுஃபெக்ஸ் கரோலென்சிஸ்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். டைனோசர்களின் வருகைக்கு முன்பு மிகப்பெரிய வேட்டையனாக இதுதான் இருந்ததாம்!