தேங்க் யூ ஐன்ஸ்டீன்



‘வனவாசிகள் -  விறுவிறு தகவல்கள்’ கட்டுரை அருமையாக இருந்தது. வனவாசி மக்களின்   
உணவுமுறை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு குறித்தெல்லாம் விரிவாகத் தெரிந்து கொண்டோம்.
-பி. கோபிநாத், மானாமதுரை.

‘ஐன்ஸ்டீன் பதில்கள்’ பகுதியில் குதிரை ரயில் குறித்த பதிலை புகைப்படத்துடன் வெளியிட்டு கலக்கி விட்டீர்கள். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் ஐன்ஸ்டீன் மாமாவின் அக்கறை அலாதியானது. தேங்க் யூ!
- சண்முகப்பிரியா, விருதுநகர்.



இதுவரை பாம்புகள்தான் கடும் விஷத்தை கொண்டுள்ளது என்று கருதி வந்தோம். ஆனால் பாம்புகள் மட்டுமல்ல,  இன்னும் பல கொடூர விஷ உயிரினங்கள் இருக்கிறது என்பதை ‘விபரீத விஷ உயிரினங்கள் ஆறு’ கட்டுரை மூலமாக தெரிந்துகொண்டோம்.  
 - சுமதி ரவி, கோவை.   

 ‘செல்ஃபி வித் சயின்ஸ்’ பகுதி மேஜிக் போல் இருக்கின்ற சில லாஜிக்குகளை உடைத்து அதை அறிவியல்பூர்வமாக விளக்கும் விதம் அருமை.
 -  காவ்யா  சந்தோஷ், அம்பத்தூர்.