துணுக்கு தோரணம்!



* பாதரச தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர் பாரன்ஹீட்.
* ரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகிறது.
* வைட்டமின் ‘சி’க்கு அஸ்கார்பிக் ஆசிட் என்றும் பெயர்.
* பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றவர் கோபர்னிகஸ்.
* நம் நாட்டின் நெல் களஞ்சியம் மேற்கு வங்காளம்.
* ‘சூரியனின் மகள்’ என்று அழைக்கப்படுவது பருத்தி.
* கண், காது இல்லாத உயிரினம் மண்புழு.
* புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் டாம் பேக்.



* பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்.
* முதல் இந்தியத் திரைப்படம் ஆலம் ஆரா. அந்த திரைப்படம் 1931 ம் ஆண்டு வெளிவந்தது.
* சிந்து நதி திபெத் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
* ஐ.நா. சபை நிறுவப்பட்ட ஆண்டு 1945.
* இந்தியாவின் முதல் பெண் கலெக்டர் சரோஜினி நாயுடு.
* அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு.
* கனடாவின் தேசியப் பறவை வாத்து.
* இந்தியாவின் தேசியப் பறவை ஆண் மயில்.
* இலங்கையின் தேசியப் பறவை காட்டுக் கோழி.
* ஆஸ்திரேலியா நாட்டின் தேசியப் பறவை ஸ்வாலோ.
* ஹவாய் நாட்டின் தேசியப் பறவை குள்ள வாத்து.
* பருந்து கொலம்பியா நாட்டின் தேசியப் பறவையாகும்.
* நீலக் கொக்கு தென்ஆப்ரிக்காவின் தேசியப் பறவை.

- சி.பரத்