பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!



Pygmy Marmosets எனும் தென் அமெரிக்க குரங்கினம், தன் குட்டிகளுக்கு மொழியை சொல்லித்தருவது மனிதர்கள் மொழியைக் கற்கும் முறையை ஒத்தது.

தென்அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரை பூர்வீகமாகக் கொண்ட Chinchilla எனும் விலங்கு, அடர்த்தியான முடியைக்கொண்டிருந்தாலும் இதில் ஒட்டுண்ணிகள் எதுவும் வாழ முடியாது. மேலும் அலர்ஜி ஏற்படுத்தாத இம் முடியில் தைக்கப்படும் உடைகள் அகில உலக ஃபேமஸ்.

குட்டி யானைகளுக்கு தும்பிக்கை, வாய், கால்கள் என ஒத்திசைவு  ஏற்பட  ஆகும் காலம்,  9 மாதங்கள். முட்டையிட்டு பால் கொடுக்கும், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட Platypus விலங்கு, கால்களில் நச்சை கொண்டது.

இது மனிதர்களைக் கொல்லாது, ஆனால் கடும்  வலி தரும். பயத்தில் அலறும் கருங்கரடிக்குட்டிகளின் ஒலியும், குழந்தைகளின் ஒலியும் ஒரே மாதிரி இருப்பதால் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.