பிளாஸ்டிக்குக்கு தடா!



அண்மையில்  கென்யாவின் உச்சநீதிமன்றம், பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த  பிளாஸ்டிக் தடை  உத்தரவுதான் பலருக்கும் பீதி. உலகிலேயே  உச்சபட்ச அபராதத் தொகை இதுவே.

எவ்வளவு? 40 ஆயிரம் டாலர்கள்.கென்யாவின் காவல்துறை பிளாஸ்டிக்  தயாரிப்பாளர்கள், டீலர்களிடம் கடுமையாக  நடந்தாலும், மக்களை  தொந்தரவு செய்யவில்லை. இது  அந்நாட்டில் மூன்றாவது முறையாக அமலுக்கு வரும் பிளாஸ்டிக் தடையாகும்.

கேமரூன், கினியா-பிஸாயூ, மாலி, தான்சானியா, உகாண்டா, எத்தியோப்பியா, மலாவி, மாரிடானியா ஆகிய ஆப்பிரிக்க பிளாஸ்டிக் தடை நாடுகளில் கென்யாவும்  இணைந்துள்ளது. கென்யாவில் ஓராண்டுக்கு 100 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என்கிறது ஐ.நா சூழலியல் அமைப்பின் ஆய்வுத்தகவல். “பிளாஸ் டிக்  பைகளுக்கு  தடை என்பதால் சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை” என்கிறார்  சுற்றுச்சூழல் அமைச்சர்
ஜூடி வாகுங்கு.