ரியலா? ரீலா?




ரீல்: திருமண ஆசீர்வாத அரிசி பறவைகளைக் கொல்லும்.

ரியல்: அரிசியால் பறவைகள் இறக்கும் என்பது செம டூப். பறவைகளின் இறப்பு பயத்தால் எகிப்தின் தொன்மை சடங்காக உருவான ஆசீர்வாத அரிசி கை விடப்பட்டு இன்று திருமணங் களில் மிகச்சிறிய பந்துகள் தம்பதிகள் மீது வீசப்படுகின்றன. 2002  இல் கென்டக்கி யுனிவர்சிட்டி செய்த ஆய்வில், பறவைகள் தின்னும் விதைகள் அரிசியை விட நிறைவு தருகின்றன என்று கூறுகிறது.

ரீல்: வௌவால்கள் குருடானவைரியல்: அப்புறம் ஏன் வௌவால்களுக்கு கண்கள் இருக்கவேண்டும்?  வௌவால்களின் கண்களால் பார்க்க முடிவதோடு, கூடுதலாக எதிரொலி முறையையும் பயன்படுத்துகிறது. கண்களைவிட எதிரொலி டெக்னிக் இன்னும்  தெளிவைத் தருகிறது.

ரீல்: பறவைக்குஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும்.

ரியல்: பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது. குஞ்சுகள் தனித்து தாயால்  விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே. எனவே மேலே நீங்கள் பார்ப்பது பொய்யான கருத்து.