மைக்ரோசாஃப்டின் ப்ரெய்ன்வேவ் முயற்சி!



மைக்ரோசாஃப்ட் தனது AI முயற்சிகளை மேம்படுத்தும் விதமாக ப்ரெய்ன்வேவ் எனும் ஹார்ட்வேரை தயாரித்துள்ளது. இது இன்டலின் ஸ்டேடிக்ஸ் 10 சிப்பில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. AI முறையில் கணினிகளுக்கு பல்வேறு விஷயங்களை எளிதில் கற்கும்படியான புரோகிராமை எழுதும்வகையிலான  ப்ரெய்ன்வேவ் ஹார்ட்வேரை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

“கிளவுட் முறையில் கோரிக்கைகளை சரிபார்த்து அனுப்பும் AI இது. தகவல்களை தேடுவது, வீடியோக்கள், பயனர்களுடன் உரையாடுவது என்பதை இந்த அமைப்பு நேர்த்தியாக செய்யும்” என்கிறது மைக்ரோசாஃப்டின் அறிக்கை. இந்த மாடல் பிற மாடல்களை விட கொஞ்சம் பெரிய சைஸ். இதனை சோதிப்பதற்கான தகவல் மையங்களை மைக்ரோசாஃப்ட் பல்வேறு இடங்களிலும் அமைத்து வருகிறது.