ட்விட்டர் ஸ்பெஷல்



நகை என்றால் என்ன அர்த்தம்?

நீலு@neelu_mn


பச்சிளம் குழந்தை மார்பில் உறங்க, அசையாது அமர்ந்திருக்கும் ஆண்மகனும் தாயே.யுகங்களாக தரிசாகக் கிடக்கும் நிலத்தின் மீது விழும் சிறுதுளியும் பெருவெள்ளம். புன்னகைத்து விடுங்கள். தரிசாக ஒரு மனம் உங்கள் முன்.

சஹாரா@dhanalakshmirs

நகை என்றால்... பெண்கள் சிரிக்கிறார்கள்...  ஆண்கள் முறைக்கிறார்கள்... அர்த்தம் புரியவில்லையோ!

ராணி சசிகுமார்@ranilisa

அப்படியே நம்பி ஆட்டுக்குட்டி போல பின்னால் செல்லத் தகுந்த ஒரே உறவு... அப்பா மட்டுமே. சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது ராவணனின் கற்பு.
கையேந்துபவரை கவனிக்காததுபோல் கைபேசியில் கானம் கேட்கும் என் மேல்சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது ‘Being Human’.

nithu @Nithu_ji

ஆயாக்களின் கவனிப்பில் இருக்கும் குழந்தைகள், தலையில் ஏதேனும் அடிபட்டால், தானே அழுது, தானே தடவிக் கொண்டு அமைதி அடைந்து விடுகின்றன.
சந்தோஷமாக வாழ்ந்த பெரியவர்கள், அடுத்த தலைமுறையினரை ரசிக்கிறார்கள். வாழ்வை சரியாக வாழாத பெரியவர்கள் எல்லாவற்றுக்கும் எரிச்சல்படுகிறார்கள்.

சொரூ...@i_soruba


கோபத்தின் மௌனங்கள் தப்புத்தப்பாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. அதற்குப் பதில் சத்தம் போட்டுவிடலாம். பதில் வராத ஒரு குறுஞ்செய்தியும் எடுக்கப்படாத ஒரு அலைபேசி அழைப்பும் நம் நேசத்தின் ஆயுளை கொஞ்சம் அசைத்துத்தான் பார்க்கின்றன.