உலக சாதனை படைத்த ஜுலன் கோஸ்வாமி



இந்திய கிரிக்கெட் அணியின் பெண்கள் பிரிவில் இதுவரை நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி. தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 5 டி/20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த தொடரில்  தனது 200 வது விக்கெட்டை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார் ஜுலன் கோஸ்வாமி. இந்திய பெண்கள் அணி கலந்து கொள்ளும் 166வது ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 10 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜுலன் கோஸ்வாமி.
 
இவர் 2007 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் விருதுக்கான சிறந்த வீராங்கனை விருதும், 2010 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இது குறித்து பேசிய ஜுலன், தான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளும் தன்னால் மறக்க முடியாதவை என்றார். தொடர்ந்து இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்க்க கடுமையாக உழைப்பேன் என்றார். ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிகளில் 200 விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை
பெற்றுள்ளார் ஜுலன் கோஸ்வாமி.

- ஜெ.சதீஷ்