பொடுகிலிருந்து விடுதலை



வாசகர் பகுதி

பொடுதலை சிறு செடி வகையை சேர்ந்தது. இது தாதுக்களைப் பலப்படுத்தும். உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். பொடுகு பிரச்சனை குறைய, முடி உதிர்வதை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாட்கள் வைத்திருந்து பின்னர் வடிகட்டி தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும்.

பொடுதலை இலைகளை அரைத்து தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க பொடுகு கட்டுப்படும். பொடுதலை இலை மற்றும் காய்களின் சாறெடுத்து அதனுடன் மிளகு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் வைத்து சாறை சுண்ட விட வேண்டும். பின் மீதியிருக்கும் எண்ணெயை தலையில் தேய்த்து தலை குளித்து வர பொடுகு நீங்கும்.

- வெ.தாரகை, கும்பகோணம்.