தூள் கிளப்பலாம் வாங்க!



சாம்பார்... வத்தக் குழம்பு... ரசம்... கூட்டு, பொரியல்...

வாரத்தின் 7 நாட்களும் வலம் வருவது இந்தச் சமையல்தான். சாம்பாரில் போடுகிற காயும், குழம்பில் சேர்க்கிற வற்றலும், கூட்டு, பொரியலுக்கான சேர்க்கையும் வேண்டுமானால் மாறுமே தவிர, செய்முறையும் சுவையும் ஒன்றேதான். ‘சாம்பாரையும் ரசத்தையும் விட்டா வேற எதுவுமே கிடையாதா?’ என அலுத்துக் கொள்கிற உணவுப் பிரியர்களை எப்படித்தான் திருப்திப்படுத்துவது?

‘‘சமையலை சுவாரஸ்யமாக்குவது ரொம்பவே சிம்பிள்’’ என்கிறார் சமையல் கலைஞர் லட்சுமி ராமன். ‘வெங்காய சாம்பார்னா உருளைக்கிழங்கு ரோஸ்ட்தான் மேட்ச்சுன்னோ, வத்தக் குழம்புக்கு சுட்ட அப்பளம்னோ சில காம்பினேஷன் காலம் காலமா நமக்குள்ள ஊறிப் போயிருக்கு. அதைக் கொஞ்சம் மாத்தினாலே போதும்... தினப்படி சமையல் தூள் கிளப்பும்’’ என்கிறவர், இங்கே செய்து காட்டியிருக்கிற 30 அயிட்டங்களும் எதனுடனும் பொருந்திப் போகிற அசத்தல் லஞ்ச் காம்போ!

குழம்புக்கு பதில் கூட்டு, பொரியலுக்குப் பதில் துவையல் என காம்பினேஷனை மாற்றி, முயற்சி செய்துதான் பாருங்களேன்...

சமையல் கலைஞர் லட்சுமி ராமன்
எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி