வறுத்து அரைச்ச ரசம்



என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
நாட்டுத் தக்காளி - 1,
புளி - 1 எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

தாளிக்க...

நெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

துவரம் பருப்பிலிருந்து பெருங்காயத் தூள் வரைக்கும் இருக்கும் அனைத்தையும் 1/2 டீஸ்பூன் எண்ணெயில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுக்கவும். வறுத்ததை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கொத்தமல்லி சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.