புடலங்காய் மிளகூட்டல்



என்னென்ன தேவை?

புடலங்காய் - 200 கிராம்,
பாசிப் பருப்பு - 100 கிராம்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
தேங்காய் - 1 மூடி (துருவிக் கொள்ளவும்),
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லி - சிறிது,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 


குக்கரில் பாசிப் பருப்பு, புடலங்காயை வேக வைத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பெருங்காயத் தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வேக வைத்த புடலங்காய், பாசிப் பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.