சேனைக்கிழங்கு மசியல்



என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 1, இஞ்சி - சிறியது,
துவரம் பருப்பு - 3/4 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தக்காளி - 1, புளி - சிறிய எலுமிச்சை அளவு,
சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.

தாளிக்க...

நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிது, கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது? 


தோல் சீவி நறுக்கிய சேனைக்கிழங்கை குக்கரில் பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, துவரம் பருப்பு சேர்த்து குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் வேக வைத்து மசித்த பருப்புக் கலவை, புளிக் கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.