மிளகுக் குழம்பு



என்னென்ன தேவை?

மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள் - 1/2டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 


புளியைக் கரைத்து கெட்டியான கரைசலாக்கி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து அதில் தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் புளிக் கரைசல், உப்பு, வெல்லம், வறுத்து அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைக்கவும்.