பருப்புத் துவையல்



என்னென்ன தேவை?

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 


கடாயில் எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வறுக்கவும். அத்துடன் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நெய்யில் கடுகு தாளித்து துவையலில் சேர்க்கவும்.