கிள்ளு மிளகாய் ரசம்



என்னென்ன தேவை?

நெய் - 1 டீஸ்பூன், கடுகு,
சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய்,
காய்ந்த மிளகாய் - தலா 1,
பழுத்த தக்காளி - 2,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
ரசப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது? 

புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல் சேர்த்து அதில் தேவையான உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். நுரைத்து வரும்பொழுது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.