பருப்பு ரசம்



என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1/4 கப் (ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்தது),
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சிறிய, பழுத்த நாட்டுத் தக்காளி - 2,
ரசப்பொடி - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - சிறிது.

தாளிக்க...

கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன். 

எப்படிச் செய்வது?


புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் ரசப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகம், தனியா தூள், பெருங்காயத் தூள், கொத்தமல்லி சேர்த்து ஒரு கொதி வந்ததும், வேக வைத்த பருப்பை, தண்ணீருடன் சேர்த்து இறக்கவும். அரை டீஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.