பருப்பு  உருண்டை  குழம்பு



என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 6,
அரிசி - 3 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
பெருங்காயத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது? 


துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியதும் வடிகட்டி, கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து புளியைக் கரைத்து கொட்டவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கும் போது இரண்டு வேக வைத்த பருப்பு உருண்டை களைப் போடவும். கொதித்து இறக்கும் முன் மீதமிருக்கும் உருண்டைகளைப் போட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவவும்.