காலிஃப்ளவர் பெப்பர் பொரியல்



என்னென்ன தேவை?

நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் - 1 கப்,
மிளகுத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, தாளிக்க எண்ணெய் - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தண்ணீரில் உப்பு போட்டு சூடாக்கி காலிஃப்ளவர் பூக்களை போட்டு சிறிது நேரம் வேகவைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெந்த காலிஃப்ளவர், மிளகுத்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி இறக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து அல்லது மேலே தூவி அலங்கரித்து சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.