சீஸ் புரோக்கோலி



என்னென்ன தேவை?

நறுக்கிய புரோக்கோலி - 1 கப்,
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
சீஸ் - 2 துண்டுகள்.

எப்படிச் செய்வது?

கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மிளகுத்தூள், புரோக்கோலி வதக்கி துருவிய சீஸ் சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு உருகிய சீஸுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.