வெஜிடபிள் புலாவ்



என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி - அனைத்தும் சேர்த்து 1 கப்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

அரைக்க...
கொத்தமல்லித்தழை - 1 கப்,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 3,
புதினா - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்களை போட்டு நன்கு வதக்கி, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு தயிர், உப்பு, பாஸ்மதி அரிசியை போட்டு வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விசில் போட்டு 20 நிமிடம் வேகவிட்டு நிறுத்தவும். விசில் அடங்கியதும் எடுத்து சூடாக பரிமாறவும்.