கார கொழுக்கட்டை



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...
பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்,
உப்பு - சிறிது.

பூரணத்திற்கு...
பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், குடைமிளகாய் - அனைத்தும் சேர்த்து 1 கப்,
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு...பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு போட்டு பிசறி வெந்நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பூரணத்திற்கு...
கடாயில் எண்ணெயை காயவைத்து கேரட், கோஸ், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். அரிசி மாவிலிருந்து சிறு உண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.