டர்னிப் கீர்



என்னென்ன தேவை?

டர்னிப் (நூக்கோல்) துருவல் - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 2 கப், சர்க்கரை - 1 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 5.

எப்படிச் செய்வது?

தவாவில் நெய் சேர்த்து சூடானதும் டர்னிப் துருவலை போட்டு பச்சைவாசனை போக வதக்கி பால் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி வறுத்த முந்திரி, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும். கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.