சாலட்



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,
புரோக்கோலி, கேரட்,
ஸ்வீட்கார்ன் முத்துக்கள் - அனைத்தும் சேர்த்து 1 கப்,
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அனைத்து காய்களையும் ஒரு பவுலில் போட்டு ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஸ்வீட்கார்ன் சேர்த்து கலந்து பரிமாறவும்.