ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியேறிய பிரபுதேவா



ஸ்ரீதேவியின் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேறிய பிரபுதேவா, மும்பையில் தீவிரமாக வீடு தேடுகிறார். இப்போது நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். அவருடன் அதே ஹோட்டலில் தங்கியுள்ள நடிகை மாஹி கில் பிரபுதேவாவின் நெருங்கிய ரகசிய தோழியாகி விட்டாராம்.

3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்ட ‘ஷோலே'க்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பிற பழைய படங்களை 3டியில் மாற்றும் முடிவை பாலிவுட் கைவிட்டுள்ளது.
திருமணம் செய்யாமலே காலம் கடத்த முடிவு செய்துவிட்டார் பிரீத்தி ஜிந்தா. இப்போது சல்மான் கானுடன் நெருங்கிப் பழகும் அவர், சல்மானின் வீடே கதி என கிடக்கிறாராம்.

தான் தயாரித்து நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்' படத்தின் முதல் ஷெட்யூல் சிறப்பாக அமைந்ததால் பார்ட்டி கொடுத்தாராம் சைப் அலிகான். இதில் அவரது மனைவி கரீனா கபூரும் பங்கேற்றார். பார்ட்டியில் பட ஹீரோயின் இலியானாவை கரீனா கண்டுகொள்ளவே இல்லையாம். 2 முறை ஹலோ சொல்லியும் இலிக்கு பதில் சொல்லவில்லையாம் கரீனா.

தென்னிந்திய ஹீரோக்களில் மகேஷ்பாபுவை அதிகம் பிடிக்கும் என சொல்லும் ஹிரித்திக் ரோஷன், அவரது லேட்டஸ்ட் படம் ‘நே ஒக்கடைன்' பார்க்க ஆவலாக இருக்கிறாராம்.

அடிக்கடி உடல்நிலை பாதிப்பதால் நொந்துபோயிருந்த ஸ்ருதிஹாசனை ஒரு பார்ட்டியில் சந்தித்தாராம் மாஜி ஹீரோயின் ரேகா (ஜெமினி கணேசனின் மகள்). யுஆண் நண்பர்களை குறைத்துக்கொள்ரு என ஸ்ருதிக்கு அட்வைஸ் தந்தாராம். அவர் முன் புன்னகை வீசிவிட்டு வெளியே வந்த ஸ்ருதி, யுஇவர் எப்படிப்பட்டவருன்னு எனக்குத் தெரியாதா என்ன?ரு என சக தோழிகளிடம் கோபத்துடன் சொன்னாராம். பி.கு: இந்த வயதிலும் அக்ஷய்குமாருடன் ரேகா கிசுகிசுக்கப்பட்டவர்.

பிபாஷாவின் மாஜி காதலன் ஜான் ஆப்ரஹாம், தனது புது காதலியை மணந்துகொண்டார். ஜானை வெறுப்பேற்ற நடிகர் ஹர்மான் பவேஜாவை திருமணம் செய்யப்போவதாக பிபாஷாவே கொளுத்திப்போட்டுள்ளாராம். ஆனால், ஹர்மானுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லையாம்.

- ஜியா