அன்விதா ஷோபி



இசையமைப்பாளர்கள் கண்டசாலா, இளையராஜா, சங்கர் கணேஷ் குழுவில் பணியாற்றிய 'டேப்' கண்ணனின் பேத்தி. தமிழ் படத்தில் 8 வயதில் டான்சராக அறிமுகமானார். பி.பி.ஏ.எம் படித்துள்ளார். லலிதா என்ற பெயரை, ‘அன்விதா ஷோபி' என்று மாற்றியுள்ளார்.

 சமஸ்கிருதத்தில் ‘அன்விதா' என்பதற்கு ‘நம்பிக்கை' என்று அர்த்தமாம். டான்ஸ் மாஸ்டர்கள் சுந்தரம், ராஜுசுந்தரம், பிரபுதேவா, சின்னி பிரகாஷ், ரேகா பிரகாஷ் குழுவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கிய ‘மரியாத ராமண்ணா'வில் தனி மாஸ்டராக அறிமுகமானார்.

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்'சில் பணியாற்றியபோது, ஷோபியுடன் காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதம் பெற்று, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, ஷோபியை திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் ஷங்கர் மூலம் ‘ஐ'யில் தனி டான்சரானார். ‘வல்லினம்', ‘டமால் டுமீல்' படங்களில் பணியாற்றுகிறார். சிறுகதை, கவிதை, பாடல் எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார். கிடார் கற்றுள்ளார். ஆக்ஷன் படம் இயக்குவது லட்சியம்.

நடிப்பிலும் ஆர்வம் உண்டு. ஷங்கரின் ‘பாய்ஸ்' படத்துக்கான தேர்வில் பங்கேற்றார். பலன் இல்லாததால், டான்ஸ் மாஸ்டராகி விட்டார். டூயட்டுக்கு மட்டுமின்றி, எல்லாவிதமான நடனங்களுக்கும் பயிற்சி அளிக்க விரும்புகிறார். அனைவரும் நடனம் கற்பதற்காக, ‘ஐபோ' நடனப் பள்ளியை நடத்துகிறார்.

- தேவராஜ்