தயங்கினார் அமலா!



அமலா போய் அமலாபால் வந்துள்ள நிலையில் இப்போது அதே பெயரில் ‘வெற்றி வேலா’ படத்தில் களமிறங்கியுள்ள புதுவரவு அமலா சுமன். அவரிடம், ‘நீங்கள் அமலா பாலுக்கு போட்டியா?’ என்று கேட்டால், பதறி அடித்துக் கொண்டு பதிலளிக்கிறார்... ‘‘குறுக்கு வழியில் புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

 என் ஒரிஜினல் பெயரே அதுதான். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக் கிறார்கள். அந்த வகையில் எனக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதில் சஞ்சய் கண்ணன், புவனான்னு இன்னொரு ஜோடியும் இருக்கிறார்கள். 

இயக்குநர் பிரபுராஜா சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. அவர்தான் என்னுடைய ஒரிஜினல் பெயர் கேச்சிங்காக இருக்கிறது என்று அதே பெயரில் நடிக்கச் சொன்னார். கமர்ஷியல் சினிமாவில் இருக்கவேண்டிய காதல், காமெடி, ஃபைட், சென்டிமென்ட்ன்னு அனைத்தும் இதில் பக்காவாக இருக்கும். எனக்கு ஜோடியாக ராம்தேவ் நடிக்கிறார். ஹீரோவும் நானும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் தயங்கித் தயங்கித்தான் நடித்தோம். அந்த சமயத்தில் இயக்குநர்தான் எங்களை உற்சாகப் படுத்தி நடிக்க வைத்தார்” என்கிறார் அமலா சுமன்.

ரா